நான் சதம் அடித்ததை விட இந்த விஷயம் நடந்தது தான் எனக்கு சந்தோசம் – ஆட்டநாயகன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

Stokes
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நடைபெற்ற இந்த முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது. பின்னர் 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது 37.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக 84 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் என 108 ரன்கள் குவித்து அசத்திய இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்-ற்கு ஆட்டநாயகன் வழங்கப்பட்டது.

பின்னர் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் : இந்த போட்டியில் நான் சதம் அடித்ததை விட எங்களது அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரானது ஒட்டுமொத்தமாகவே எங்கள் அணிக்கு ஒரு கடினமான உலகக்கோப்பை தொடராக அமைந்தது.

- Advertisement -

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய சற்று எளிதாக இருந்தது. குறிப்பாக டென்னிஸ் பால் பவுன்ஸ் இந்த மைதானத்தில் இருந்ததால் எங்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது. எனக்கும் வோக்ஸ்க்கும் இடையே சிறப்பான பார்ட்னர்ஷிப் இருந்தது. நான் எப்போதெல்லாம் அழுத்தமான சூழ்நிலையை இந்த போட்டியில் சந்தித்தேனோ அப்போதெல்லாம் ஸ்கோர் போர்டை பார்க்கும் போது இன்னும் இந்த போட்டியில் நிறைய ஓவர்கள் இருப்பதை கவனித்தேன்.

இதையும் படிங்க : ஃசெல்பிஷ்க்கு எடுத்துக்காட்டே விராட் கோலி தான்.. விமர்சித்த ஹபீஸ்க்கு மீண்டும் மைக்கேல் வாகன் பதிலடி

அதன்படியே போட்டியை நீண்ட நேரம் கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இறுதிவரை விளையாடியதில் மகிழ்ச்சி. வோக்ஸ் ஒரு தரமான ஆள்ரவுண்டர் என்பதை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். இந்த போட்டியிலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement