ஃசெல்பிஷ்க்கு எடுத்துக்காட்டே விராட் கோலி தான்.. விமர்சித்த ஹபீஸ்க்கு மீண்டும் மைக்கேல் வாகன் பதிலடி

Mohammed Hafeez 5
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 8ஆம் தேதி புனேவில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் 108, கிறிஸ் ஓக்ஸ் 51 ரன்கள் எடுத்த உதவியுடன் 340 ரன்களை வெற்றி இலக்காக வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய நெதர்லாந்து சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 179 ரன்கள் மட்டுமே எடுத்து 6வது தோல்வியை பதிவு செய்தது. அதனால் அந்த அணி இந்த உலகக் கோப்பையிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. மறுபுறம் ஏற்கனவே வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இந்த வெற்றியால் 2025 சாம்பியன் டிராபிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

வாகன் பதிலடி:
முன்னதாக இப்போட்டியில் 192/6 என சரிந்த இங்கிலாந்து 250 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் நிதானமாகவும் கடைசியில் அதிரடியாகவும் விளையாடி 6 பவுண்டரி 6 சிக்சருடன் உலகக்கோப்பையில் தன்னுடைய முதல் சதமடித்து 108 ரன்கள் குவித்தார். அப்படி வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

ஆனால் அதைப் பார்த்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் ட்விட்டரில் இது தான் சுயநலமாக விளையாடிய விராட் கோலிக்கும் சுயநலமின்றி விளையாடிய பென் ஸ்டோஸ்க்கும் உள்ள வித்தியாசம் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை டேக் செய்து பதிவிட்டார். அதாவது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி உட்பட கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடாமல் சதத்திற்கு சுயநலத்துடன் பேட்டிங் செய்ததாக முகமது ஹபீஸ் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

அதற்கு சவாலான பிட்ச்சில் நங்கூரமாக விளையாடி 101* ரன்கள் குவித்த விராட் கோலி இந்தியா 200 ரன்களுக்கு மேல் வெற்றியை பதிவு செய்யும் அளவுக்கு சிறப்பாக விளையாடியதாக தெரிவித்த மைக்கேல் வாகன் இது முட்டாள்தனமான கருத்து என்று ஹபீஸ்க்கு பதிலடி கொடுத்தார். அதன் தொடர்ச்சியாகவே ஹபீஸ் இப்போட்டியில் விராட் கோலி சுயநலத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று பதிவிட்டது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்த வெற்றியை தான் தேடிட்டு இருந்தோம்.. அதை அவரு வாங்கி குடுத்துட்டாரு – வெற்றிக்கு பின் ஜாஸ் பட்லர் பேட்டி

“கப்பலை நிறுத்திய இன்னிங்ஸ் பென் ஸ்டோக்ஸ். அழுத்தத்திற்கு மத்தியில் அபாரமான சதமடித்தீர்கள். தேவைப்படும் போது கடைசி நேரத்தில் அணிக்காக அதிரடியாக விளையாடி அதிக ரன்களையும் குவித்தீர்கள். இது தான் சுயநலம் மற்றும் தன்னலமற்ற அணுகுமுறையை வேறுபடுத்துவதற்கான தெளிவான உதாரணம் மைக்கேல் வாகன்” என்று பதிவிட்டார். அதற்கு மைக்கேல் வாகன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு. “ஸ்டோக்ஸ் மகத்தான சிறப்பான விளையாடினார் ஹபீஸ். அதே சமயம் விராட்டின் சதம் கொல்கத்தாவில் கடினமான பிட்ச்சில் இதை விட கடினமான அணிக்கு எதிராக இருந்தது” என்றுகூறியுள்ளார்.

Advertisement