IND vs SL : ஃபைனலில் மழை வருமா? போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு? வெதர் ரிப்போர்ட்.. ரூல்ஸ் கூறுவது இதோ

Rain 2
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்ட நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்தியா ஆகிய அணிகள் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்புவில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் இந்தியா 6 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக திகழும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வெற்றி வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் இத்தொடரின் பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியிலும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது ரசிகர்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

- Advertisement -

கோப்பை யாருக்கு:
ஏனெனில் நேற்று இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியில் ஒதுங்கியிருந்த மழை ஃபைனல் நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்பு நகரில் சராசரியாக 70% பெய்யும் என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி நடைபெறும் மதியம் 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 60 – 70% இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது.

இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக முன்கூட்டியே ஆசிய கவுன்சில் இந்த போட்டிக்கு ரிசர்வ் நாள் அறிவித்துள்ளது. அதன் காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதி மழை வந்தால் மீண்டும் திங்கள்கிழமை நின்ற இடத்திலிருந்து போட்டி நடைபெறும். ஆனால் திங்கள்கிழமையும் கொழும்பு நகரில் சராசரியாக 70 – 80% மழை பெய்யும் என்று அறிவிக்கப்படுவதால் மீண்டும் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனால் எப்படியாவது இடையிடையே மழை ஓய்ந்தால் கூட அதற்குள் ஓவர்கள் குறைத்து போட்டியை நடத்தி வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். அதன் உச்சமாக இரு அணிகளும் குறைந்தபட்சம் 20 ஓவர்களாவது விளையாடியிருக்கும் பட்சத்தில் டிஎல்எஸ் விதிமுறையை பயன்படுத்தி வெற்றியாளர் யார் என்பதை நடுவர்கள் தீர்மானிப்பார்கள்.

இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமா? ஐசிசி பல் இல்லாத புலியா மாறிட்டாங்க.. இந்தியாவை கடுமையாக – விமர்சித்த அர்ஜுனா ரணதுங்கா

இருப்பினும் அதையும் தாண்டி தொடர்ந்து விடாமல் மழை பெய்யும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் சமமாக கோப்பை பகிர்ந்து கொடுக்கப்படும். அதனால் மழையால் பாதிக்கப்பட்ட 2002 சாம்பியன்ஸ் டிராபி போலவே இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகளுமே 2023 ஆசிய கோப்பையின் வெற்றியாளர்களாக தீர்மானிக்கப்பட்டு சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement