இதெல்லாம் நியாயமா? ஐசிசி பல் இல்லாத புலியா மாறிட்டாங்க.. இந்தியாவை கடுமையாக – விமர்சித்த அர்ஜுனா ரணதுங்கா

Arjuna Ranatunga
- Advertisement -

ஆசிய கண்டத்தின் புதிய கிரிக்கெட் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் இந்திய ஆகிய அணிகள் செப்டம்பர் 17ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. முன்னதாக பாகிஸ்தானில் முழுமையாக நடைபெறுவதாக இருந்த இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டுக்கு செல்ல முடியாது என்று தொடர்ந்து இந்தியா அடம் பிடித்தது.

அதனால் நிறைய காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்தது. குறிப்பாக இலங்கை போன்ற மற்ற நாடுகளை காட்டிலும் ஆசிய கவுன்சிலுக்கு அதிக வருமானத்தை சம்பாதித்து கொடுப்பதாலும் அதன் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பதாலும் இந்த விவகாரத்தில் எவ்வளவு தான் பேசினாலும் கடைசியில் பாகிஸ்தானால் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

பல் இல்லாத ஐசிசி:
அதை விட மழைக்காலம் என்று தெரிந்தும் இலங்கையில் நடத்தப்பட்ட இத்தொடரில் எதிர்பார்க்கப்பட்டது போலவே பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு மோதிய போட்டிக்கு மட்டும் ஸ்பெஷலாக ஆசிய கவுன்சில் ரிசர்வ் நாள் அறிவித்தது. அதனால் நாங்கள் அவ்வளவு கேவலமாகா போய் விட்டோமா என்று சமூகவலைத்தளங்களில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர்.

அந்த விமர்சனங்களை தவிர்க்க ஆசிய கவுன்சில் கொடுத்து அழுத்ததால் தங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை என்று இலங்கை மற்றும் வங்கதேச வாரியங்கள் அறிக்கை வெளியிட்டு அடிபணிந்தன. இந்நிலையில் இந்தியாவின் இந்த அதிகாரத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் ஐசிசி பல் இல்லாத புலியை போல் இருப்பதாக 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணுதுங்கா சமீபத்திய பேட்டியில் விமர்சித்தது. பின்வருமாறு.

- Advertisement -

“ஆசிய கோப்பையில் உங்களுக்கு முன் விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் ஒரு போட்டிக்காக மட்டும் அவர்கள் விதிமுறைகளை மாற்றினார்கள். இங்கே ஆசிய கவுன்சில் மற்றும் ஐசிசி எங்கே இருக்கிறது? ஒரு அணிக்காக நீங்கள் விதிமுறைகளை மாற்றினால் அது எனக்கு சரியாக தோன்றவில்லை. இதனால் நீங்கள் வருங்காலத்தில் இன்னும் மோசமான நிகழ்வுகளை பார்ப்பீர்கள். இங்கே ஐசிசி மற்றும் ஆசிய கவுன்சில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அமைதியாக இருப்பதை பார்த்து நான் வருத்தமடைகிறேன்”

இதையும் படிங்க: இந்தியா எல்லா மேட்ச்சுலையும் அதை செஞ்சு அசத்துறாங்க.. நீங்க ஏன் சோம்பேறியா இருக்கீங்க? பாக் அணியை விமர்சித்த ஷாஹித் அப்ரிடி

“அதே போல பணத்திற்காக முன்னாள் வீரர்களும் இதைப் பற்றி வாயை திறப்பதில்லை. இங்கே ஐசிசி பல் இல்லாத புலியாகியுள்ளது. கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. மேலும் கிரிக்கெட்டை ஐசிசி கட்டுப்படுத்த வேண்டுமே தவிர ஒரு நாடு கட்டுப்படுத்த கூடாது. இங்கே இந்தியா அதிகாரத்தைக் கொண்டிருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு ஐசிசி அதிகாரிகளும் மிடுக்கான உடைகளை அணிந்து கொண்டு சம்மதம் தெரிவிக்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisement