20 வயது தான்.. கிங் கோலி, ஹிட்மேன் ரோகித், கில் என வரிசை கட்டிய 5 விக்கெட்.. யார் இந்த துணித் வெல்லாலகே?

Dunith Wellalage 3
Advertisement

உச்சகட்ட விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 49.1 ஓவரில் போராடி 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 53 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக துணித் கருணரத்னே 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய இலங்கை முடிந்தளவுக்கு போராடியும் 41.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக துணித் வெல்லலேக் 42* ரன்களும் தனஞ்செயா டீ சில்வா 41 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உனக்காக இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷாப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

20 வயது இளம் புயல்:
அதனால் எளிதாக 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா அப்படியே இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளம் ஸ்பின்னர் வெல்லலேகேவின் மாயாஜால சுழலில் பெட்டி பாம்பாக அடங்கி 213 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக அவருடைய தரமான சூழலை கணிக்க முடியாமல் ரோகித் சர்மா, சுப்மன் கில் இதுவரை போல நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படும் விராட் கோலியும் தம்முடைய விக்கெட்டை பரிசளித்தார்.

அத்துடன் க்ளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் ராகுலையும் அதிரடியான ஹர்திக் பாண்டியாவையும் காலி செய்த அவர் 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 40 ரன்கள் மட்டும் கொடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த இலங்கை வீரராக சாதனை படைத்தார். அதே போல 2 கேட்ச்களைப் பிடித்து பேட்டிங்கிலும் 42* ரன்கள் எடுத்ததால் இலங்கை தோற்றாலும் அவருடைய திறமைக்கு ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது.

- Advertisement -

கொழும்புவில் கடந்த 2003 ஜனவரி 9ஆம் தேதி பிறந்த அவர் கிரிக்கெட்டின் மீதான காதலால் தமது நாட்டு ஜாம்பவான் வீரர்களை பார்த்து உத்வேகமடைந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2022ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் இலங்கையை கேப்டனாக வழி நடத்திய அவர் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து 5 விக்கெட் ஹால் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையும் படிங்க: IND vs SL : பேட்டிங்கிலும் மெகா சவாலை கொடுத்த 20 வயது வெல்லாலகே- கடைசியில் மேஜிக் செய்த இந்திய அணி ஃபைனலுக்கு சென்றது எப்படி?

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனலில் 113 ரன்கள் எடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய அவர் அந்தத் தொடரில் அதிக ரன்கள் (264) மற்றும் அதிக விக்கெட்கள் (17) எடுத்த இலங்கை வீரராக சாதனை படைத்தார். அதனால் கடந்த 2022 ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தி வரும் அவர் இதுவரை 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement