இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி எது தெரியுமா? – வெளியான புள்ளி விவரம்

Jadeja
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த தொடரில் மும்பை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு காணாமல் போன நிலையில் மற்ற அணிகள் அனைத்திற்கும் பிளே ஆப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருப்பதனால் தற்போது அனைத்து அணிகளும் போட்டி போட்டு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

- Advertisement -

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளதால் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் மிகவும் திரில்லிங்கான வெற்றிகள் பல கிடைத்துள்ளன. ஆனாலும் இந்த தொடர் முழுவதுமே அனைத்து அணிகளுடைய பீல்டிங்கும் சுமாராக உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் ஐபிஎல் தொடரில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் அதிக அளவில் அனைத்து அணிகளும் கேட்ச்களை தவறவிட்டு வருகின்றன.

ஒவ்வொரு போட்டியிலும் மூன்று முதல் நான்கு கேட்ச்கள் விடப்படுவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட சென்னை அணியை சேர்ந்த மூன்று பேர் மூன்று எளிதான காட்சிகளை தவற விட்டனர். அதன் காரணமாகவே எளிதாக வெற்றி பெற வேண்டிய அந்த போட்டியை சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நெருங்கி வந்து வெற்றி பெற்றது.

jadeja 1

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி எது? என்பது குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணியாக நடப்பு சாம்பியன் சிஎஸ்கே இருக்கிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்றுள்ள 9 போட்டிகளில் அவர்கள் 19 கேட்ச்களை தவற விட்டிருக்கின்றனர்.

- Advertisement -

அவர்களை தொடர்ந்து டெல்லி மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தலா 15 கேட்ச்களை தவறவிட்டு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். மேலும் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் அனைத்து அணிகளுமே பல கேட்ச்களை தவறவிட்டு வரிசைகட்டி நிற்கின்றன. அதேவேளையில் இந்த தொடரில் அதிக கேட்ச்களை பிடித்த தனிப்பட்ட வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் அணியை சேர்ந்த ரியான் பராக் வைத்துள்ளார்.

இதையும் படிங்க : ரசிகனாக மாறி தோனியின் ஆட்டோகிராப் வாங்கிய தெ.ஆ ஜாம்பவான் – இந்திய ரசிகர்கள் பெருமை

இந்த தொடரில் இதுவரை அவர் 11 கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச்களை பிடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். வழக்கமாகவே ஐபிஎல் தொடரில் பல அற்புதமான கேட்ச்கள் பிடிக்கப்பட்டு இருக்கும் வேளையில் இந்த தொடரிலும் பல அற்புதமான கேட்ச்கள் பிடிக்கப்பட்டு இருந்தாலும் எளிதான பல கேட்ச்களை வீரர்கள் தவறவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement