ரசிகனாக மாறி தோனியின் ஆட்டோகிராப் வாங்கிய தெ.ஆ ஜாம்பவான் – இந்திய ரசிகர்கள் பெருமை

Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 46-ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. புனே நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் ஹைதராபாத்தை வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை பங்கேற்ற 9 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 202/2 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி ஐதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஒவ்வொரு ஓவரிலும் பட்டாசான பவுண்டரிகளை பறக்க விட்டு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்தும் அதிரடியை கைவிடாமல் பேட்டிங் செய்தனர். இதில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 99 (57) ரன்கள் எடுத்த ருதுராஜ் 1 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் டேவோன் கான்வேயுடன் 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடி என்ற பெருமையுடன் பெவிலியன் திரும்பினார்.

சென்னை அசத்தல்:
அவருடன் அட்டகாசமாக பேட்டிங் செய்த டேவோன் கான்வே தனது பங்கிற்கு 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 85* (55) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 203 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் ஆகியோர் 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் அபிஷேக் சர்மா 39 (24) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ராகுல் திரிபாதி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Mukesh Chowthry CSK

அந்த சமயத்தில் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த கேன் வில்லியம்சன் 47 (37) ரன்களில் அவுட்டாகி சென்றபோது ஐடன் மார்க்ரமும் 17 (10) ரன்களில் அவுட்டானதால் ஹைதராபாத் தோல்வி உறுதியானது. இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 6 பவுண்டரி 3 சிக்சருடன் 64* (33) ரன்கள் எடுத்தாலும் 20 ஓவர்களில் 189/6 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத் போராடி தோற்றது. இப்போட்டியில் போராடித் தோல்வி அடைந்த ஹைதராபாத் 4-வது தோல்வியை பதிவு செய்து தொடர்ந்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

கேப்டன் தல தோனி:
முன்னதாக இப்போட்டியில் சென்னைக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான 2-வது ஐபிஎல் அணி என்ற பெயருடன் ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படும் இந்தியாவின் நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக திரும்பியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமைந்தது. 2008 முதல் தொடர்ச்சியாக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து போட்டிகளில் அடைப்படையில் வரலாற்றின் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்த அவர் 40 வயதைக் கடந்த காரணத்தால் காலம் காலமாக வசித்து வந்த கேப்டன்சிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக அவருக்கு உதவியாக விளையாடி வந்தார்.

Ravindra Jaddeja MS Dhoni

இருப்பினும் அனுபவமில்லாத கேப்டன்சிப் பொறுப்பேற்ற ஜடேஜா அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் தடுமாறியதால் மீண்டும் அந்தப் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தார். அப்படிப்பட்ட நிலையில் கேப்டனாகவே பார்த்து வளர்ந்த பல ரசிகர்கள் மீண்டும் அவரை கேப்டனாக பார்த்ததில் மனதார மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் நேற்று 3-வது இடத்தில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது புனே நகரில் கூடியிருந்த மொத்த ரசிகர்களும் “தோனி, தோனி” என்ற முழக்கத்தால் மைதானத்தை அதிர வைத்தனர்.

- Advertisement -

ஆட்டோகிராப்:
மேலும் ஜடேஜா தலைமையில் பலவீன அணியாக காட்சியளித்த சென்னை நேற்றைய போட்டியில் அவர் கேப்டனாக திரும்பியதும் பேட்டிங் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்டு மீண்டும் அதே பழைய வெற்றி நடைபோடும் சென்னையாக காட்சியளிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் உதவியுடன் எஞ்சிய போட்டியிலும் வென்று தங்கள் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற புதிய நம்பிக்கை சென்னை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இந்த போட்டி முடிந்த பின் ஹைதராபாத் அணியை சேர்ந்த பல இளம் வீரர்களும் வழக்கம்போல தோனியிடம் வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவரின் அனுபவங்களை கேட்டறிந்தனர். ஆனால் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் டேல் ஸ்டெயின் அவரிடம் வந்து ஒரு ரசிகனை போல் ஆட்டோகிராப் வாங்கியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : 99இல் அவுட்டானாலும் ஜாம்பவான் சச்சினின் வரலாற்று சாதனையை சமன் செய்த ருதுராஜ் – விவரம் இதோ

ஏனெனில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஜாம்பவான் டேல் ஸ்டெயின் எம்எஸ் தோனி போன்ற ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்று ரசிகர்களால் ஜாம்பவானாக கொண்டாடப்படும் ஒருவராவார். அப்படிப்பட்ட அவரே தோனியின் ரசிகனாக மாறி ஆட்டோகிராப் வாங்கியது உண்மையாகவே இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய பெருமையாகும்.

Advertisement