99இல் அவுட்டானாலும் ஜாம்பவான் சச்சினின் வரலாற்று சாதனையை சமன் செய்த ருதுராஜ் – விவரம் இதோ

Ruturaj Kane Williamson
- Advertisement -

பல எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 46-வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்றன. புனேவில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னைக்கு கேப்டனாக ஜாம்பவான் எம்எஸ் தோனி மீண்டும் திரும்பிய நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 202/2 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு ராபின் உத்தப்பாவுக்கு பதில் நியூசிலாந்தின் டேவோன் கான்வே – ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஹைதராபாத்தை முதல் ஓரியிலிருந்தே சொல்லி அடித்தார்கள்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH 2.jpeg

- Advertisement -

குறிப்பாக உம்ரான் மாலிக், நடராஜன், மார்கோ யான்சென் என இந்த வருடத்தின் சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக திகழும் ஹைதராபாத் விசிய ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அவர்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த போதிலும் அவுட்டாகாமல் தொடர்ந்து பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இவர்களை அவுட் செய்ய முடியாமல் கேப்டன் வில்லியம்சன் விழி பிதுங்கி நிற்க மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ருத்ராஜ் சதத்தை நெருங்கினார்.

99இல் அவுட்:
மொத்தம் 57 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 99 ரன்கள் எடுத்த அவர் சதம் அடிக்க முயற்சித்தபோது நடராஜன் வீசிய பந்தில் துரதிர்ஷ்டவசமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனால் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பிய அவர் 182 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையுடன் விடை பெற்றார். இருப்பினும் மறுபுறம் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த டேவோன் கான்வே அதிரடியாக 8 பவுண்டரி 4 சிக்சர்கள் 85* (55) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் நல்ல பினிஷிங் கொடுத்தார். ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

அதை தொடர்ந்து 203 என்ற பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தநர். அப்போது அபிஷேக் வர்மா 39 (24) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த சில ஓவர்களிலேயே ஐடன் மார்க்கம் 17 (10) ரன்களில் அவுட்யாக மறுபுறம் அதிரடி காட்டிக்கொண்டிருந்த கேன் வில்லியம்சனும் ஒரு கட்டத்தில் 47 (37) ரன்களில் அவுட்டானதால் ஹைதெராபாத் திடீரென பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

சென்னை சூப்பர் வெற்றி:
அந்த சமயத்தில் வந்த ஷஹாங்க் சிங் 15 (14) வாசிங்டன் சுந்தர் 2 (2) போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 6 பவுண்டரி 3 சிக்சருடன் 64* (33) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினாலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 189/6 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் போராடி தோற்றது. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சரியான நேரங்களில் சரியாக செயல்பட்ட சென்னை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 9 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்ததது.

Ruturaj gaikwad 73

சென்னை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகேஷ் சவுத்ரி 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த நிலைமையில் அடுத்த 5 போட்டிகளில் இதேபோல் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சென்னைக்கு உள்ளது என்றாலும் அதற்கு அதிர்ஷ்டத்தின் உதவியும் சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது. இந்த வெற்றிக்கு 99 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ருத்ராஜ் கைக்கவாட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

சச்சின் சாதனை சமன்:
இப்போட்டியில் வெறும் 1 ரன்னில் சதத்தை தவறவிட்டு பரிதாபமாக வெளியேறிய அவரை பல ஜாம்பவான்கள் இது சதத்திற்கு ஈடானது என்பதால் வருத்தப்பட வேண்டாம் என்று பாராட்டி வருகின்றனர். முன்னதாக இப்போட்டியில் 99 ரன்களை விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து மிகப்பெரிய பெருமையைப் பெற்றார்.

sachin2

அந்தப் பட்டியல் இதோ:
1. சச்சின் டெண்டுல்கர்/ருதுராஜ் கைக்கவாட் : 31 இன்னிங்ஸ்
2. சுரேஷ் ரெய்னா : 34 இன்னிங்ஸ்
3. ரிஷப் பண்ட்/தேவ்தூத் படிக்கல் : 35 இன்னிங்ஸ்
4. கெளதம் கம்பீர் : 36 இன்னிங்ஸ்

இதையும் படிங்க : 40 வயதிலும் வெற்றிநடை. ஜாம்பவான் டிராவிட்டின் ஆல் டைம் சாதனையை தகர்த்த தல தோனி – விவரம் இதோ

பொதுவாகவே இதுபோல் 99 ரன்களில் சச்சின் டெண்டுல்கர் நிறைய முறை அவுட்டானதை பார்த்துள்ளோம். அதேபோலவே நேற்றைய போட்டியில் 99 ரன்களில் அவுட்டான அவர் அவரையும் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 31 இன்னிங்சிஸ்களுக்குப் பின் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ருதுராஜ் கைக்வாட் : 1076 ரன்கள்
2. சச்சின் டெண்டுல்கர் : 1064
3. தேவ்தூத் படிக்கல் : 932 ரன்கள்

Advertisement