40 வயதிலும் வெற்றிநடை. ஜாம்பவான் டிராவிட்டின் ஆல் டைம் சாதனையை தகர்த்த தல தோனி – விவரம் இதோ

MS DHoni Rahul Dravid CSK vs RR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 46-ஆவது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் சந்தித்தன. புனேவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பட்டாசான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202/2 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே பவர்பிளே ஓவர்களில் பொறுமையாக பேட்டிங் செய்து விக்கெட்டுகளை விடாமல் அதன்பின் விஸ்வரூபம் எடுத்து ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்தனர்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

- Advertisement -

இதில் ஒருபுறம் டேவோன் கான்வே சற்று பொறுமையை கையாள மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரைசதம் கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்து சதத்தை நெருங்கினார். ஆனால் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் உட்பட 99 (57) எடுத்த அவர் நடராஜன் வீசிய பந்தில் துரதிருஷ்டவசமாக அவுட்டானாலும் 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையுடன் விடைபெற்றார்.

ஹைதெராபாத் போராட்டம்:
அவருக்கு ஈடாக மறுபுறம் ரன்களை அதிரடியாக விளாசிய டேவோன் கான்வே தனது பங்கிற்கு அரைசதம் கடந்த 8 பவுண்டரி 4 சிக்சர்கள் 85* (55) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் நல்ல பினிஷிங் கொடுத்தார். ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 203 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு கேன் வில்லியம்சன் அபிஷேக் சர்மா ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டனர்.

Ruturaj Kane Williamson

அப்போது அபிஷேக் சர்மா 39 (24) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ராகுல் திரிபாதி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த சமயத்தில் கேப்டன் வில்லியம்சனும் 47 (37) ரன்களில் ஆட்டமிழந்து நிலையில் ஐடன் மார்க்ரமும் 17 (10) ரன்களில் அவுட்டானதால் ஹைதராபாத் பெரிய பின்னடைவை சந்தித்தது. கடைசியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 64* (33) ரன்களை பறக்க விட்டாலும் கூட அவருக்கு கைகொடுக்க இதர வீரர்கள் இல்லாததால் 20 ஓவர்களில் 189/6 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் போராடி தோற்றது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை முகேஷ் சவுத்ரி எடுத்தார்.

- Advertisement -

தல தோனி பேக்:
இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற சென்னை பங்கேற்ற 9 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த வெற்றிக்கு 99 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ருதுராஜ் கைக்வாட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவை அனைத்தையும் விட 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற சாதனையுடன் சென்னையை 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக தரம் உயர்த்திய எம்எஸ் தோனி கேப்டனாக மீண்டும் சென்னையை இப்போட்டியில் வழிநடத்தினார்.

Ravindra Jaddeja MS Dhoni

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் பெரும்பாலான வருடங்களில் குறைந்தது பிளே ஆப் சுற்றுக்கு சென்னையை அழைத்துச் சென்ற அவர் 40 வயதை கடந்த காரணத்தால் இந்த வருடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடி வந்தார். ஆனால் கேப்டன்ஷிப் அனுபவம் கொஞ்சமும் இல்லாத ஜடேஜா தலைமையில் தொடர் தோல்விகளை சென்னை சந்தித்தது. அதைவிட அதுவரை அற்புத ஆல்-ரவுண்டராக செயல்பட்ட ஜடேஜா கேப்டன்சிப் பொறுப்பேற்றதும் அதன் அழுத்தத்தால் பேட்டிங் பௌலிங் என அனைத்திலும் தடுமாறியதால் மீண்டும் அந்த பொறுப்பை தோனியிடமே வழங்கினார்.

- Advertisement -

புதிய சாதனை:
அந்த வகையில் ஜடேஜா தலைமையில் தடுமாற்ற அணியாக காட்சியளித்த சென்னை நேற்றைய போட்டியில் பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் அற்புதமாக செயல்பட்டு மீண்டும் அதே பழைய வெற்றி நடைபோடும் சென்னையாக காட்சியளிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 5 போட்டிகளிலும் இதேபோல் வெற்றி பெற்று அதிர்ஷ்டத்தின் உதவியுடன் சென்னை நிச்சயம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை அந்த அணி ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

Dravid

முன்னதாக இப்போட்டியில் கேப்டனாக மீண்டும் திரும்பிய எம்எஸ் தோனி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிக வயதில் ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்ட இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். கடைசியாக கடந்த 2013இல் ராஜஸ்தானுக்காக அதிக வயதில் கேப்டனாக செயல்பட்ட இந்திய வீரராக பெருமை பெற்றிருந்த ராகுல் டிராவிட்டின் சாதனையை 9 வருடங்கள் கழித்து எம்எஸ் தோனி முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : தவறான முடிவால் வெற்றி போச்சு! ஆஸி வீரரால் ரசிகர்கள் ஏமாற்றம் – என்ன நடந்தது? (ரொம்ப பாவம் அவரு)

அந்த விவரம் இதோ:
1. எம்எஸ் தோனி : 40 வருடம் 298 நாட்கள்
2. ராகுல் டிராவிட் : 40 வருடம் 268 நாட்கள்
3. சுனில் ஜோசி : 40 வருடம் 135 நாட்கள்
4. அனில் கும்ப்ளே : 39 வருடம் 342 நாட்கள்
5. சௌரவ் கங்குலி : 39 வருடம் 316 நாட்கள்

Advertisement