இங்க தோத்துருக்கலாம்.. ஆனா அங்க பட்டாசா விளையாடி பிளே ஆஃப் வருவோம்.. எச்சரித்த கேப்டன் கமின்ஸ்

Pat Cummins
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே 6ஆம் தேதி நடைபெற்ற 55வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் போராடி 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48, கேப்டன் பட் கமின்ஸ் 35* ரன்கள் எடுத்தனர்.

அதைத் துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 4, இசான் கிசான் 9, நமன் திர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் சூரியகுமார் அற்புதமாக விளையாடி சதமடித்து 102* ரன்களும் திலக் வர்மா 37* ரன்கள் அடித்து 17.2 ஓவரிலேயே மும்பையை வெற்றி பெற வைத்தனர். அதனால் லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதில் இருந்து தற்காலிகமாக மும்பை தப்பியது.

- Advertisement -

எச்சரித்த கமின்ஸ்:
ஆனால் 11 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த ஹைதராபாத் பிளே ஆஃப் செல்லும் பயணத்தில் பின்னடைவை சந்தித்தது. தற்சமயத்தில் அடுத்த 3 போட்டிகளில் குறைந்தது இரண்டில் வென்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆஃப் செல்ல முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேட்டிங்க்கு சாதகமான வான்கடே மைதானத்தில் கொஞ்சம் குறைந்த ரன்கள் எடுத்தது தோல்வியை கொடுத்ததாக ஹைதராபாத் கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சொந்த ஊரான ஹைதெராபாத்தில் விளையாடுவதே தங்களுடைய பலம் என்று கமின்ஸ் கூறியுள்ளார். எனவே தங்களுடைய கடைசி 3 போட்டிகளும் ஹைதராபாத் நகரில் நடைபெறுவதால் அதில் பட்டாசாக விளையாடி எதிரணிகளை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு வருவோம் என்று மறைமுகமாக எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கொஞ்சம் குறைந்த ரன்கள் எடுத்தோம்”

- Advertisement -

“வான்கடேவில் உங்களால் முடிந்த அளவுக்கு அதிக ரன்கள் எடுக்க வேண்டும். பிட்ச் கொஞ்சம் கை கொடுத்ததால் நீங்கள் எப்போதும் போட்டியில் இருக்கிறீர்கள் என்பது போல் உணர்ந்தேன். மேலும் 150 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்து 170 ரன்கள் எடுப்பதற்கு எங்கள் வீரர் சன்வீர் சிங் உதவினார் என்று நினைக்கிறேன். நாங்கள் எக்ஸ்ட்ரா பவுலரை கொண்டிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: இந்தியா டி20 உ.கோ ஜெயிக்க நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்கனும்? பொல்லார்ட் பதிலால் இந்திய ரசிகர்கள் கோபம்

“சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். நாங்கள் எங்களுடைய சொந்த ஊரில் விளையாடுவதை விரும்புகிறோம். எனவே காத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அங்கே இன்னும் சில பட்டாசு போன்ற ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி தங்களுடைய கடைசி 3 போட்டிகளில் லக்னோ, குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளை சொந்த ஊரில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement