இந்தியா டி20 உ.கோ ஜெயிக்க நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்கனும்? பொல்லார்ட் பதிலால் இந்திய ரசிகர்கள் கோபம்

Kieron Pollard
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் 12 போட்டிகளில் 4 வெற்றி 7 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% இழந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகியுள்ளது.

இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல பந்து வீச்சுத் துறையில் ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவது மும்பையின் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
மொத்தத்தில் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணி வெறும் கையுடன் வெளியேறுவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் விரைவில் 2024 டி20 உலகக் கோப்பை துவங்க உள்ளது. எனவே அதில் இந்தியாவின் வெற்றிக்கு புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடுவதற்காக மும்பையின் கடைசிக்கட்ட போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து பிசிசிஐயும் மும்பை அணியிடம் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்தியாவுக்காக பும்ராவுக்கு கடைசிக்கட்ட ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு கொடுக்க முடியாது என்று மும்பை அணியின் பயிற்சியாளர் கைரன் பொல்லார்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதைப் பற்றி நான் எதையும் பேசவில்லை. இந்த நேரத்தில் அது என்னுடைய வேலையில்லை என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஆனால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். இருப்பினும் நாங்கள் அனைவரும் மொத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காகவே இங்கே இருக்கிறோம். சில நேரங்களில் உலகக்கோப்பை போன்ற அதிக தொலைவில் இருக்கும் விஷயங்களை நீங்கள் சிந்திக்கும் போது அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாகவே உங்களுடைய செயல்பாடுகள் பாதிக்கும்”

இதையும் படிங்க: ஒழுங்கா இங்கிலிஷ் தெரியாததால் கலாய்ப்போம்.. ரோஹித் சர்மா அதுக்கு தகுதியானவர்.. யுவராஜ் ஆதரவு

“எனவே எங்கள் அணியை பொறுத்த வரை முதலில் ஐபிஎல் தொடரை முழுமையாக முடிப்பது முக்கியம். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். ஐபிஎல் முடிந்து பும்ரா இந்திய அணிக்கு செல்லும் போது அங்கு தான் அந்த சலுகை கிடைக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அதாவது இந்திய அணிக்காக நாங்கள் ஏன் பும்ராவை விட்டு தர வேண்டும்? என்ற வகையில் பொல்லார்ட் கொடுத்துள்ள இந்த பதில் இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைவது குறிப்பிடத்தக்கது.

Advertisement