பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய தல தோனி. விவரம் இதோ

MS
- Advertisement -

தர்மசாலா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியினை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவிக்க 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்ததால் 28 நாட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பாக ஒன்பதாவது வீரராக களம் இறங்கிய தோனி தான் சந்தித்த முதல் பந்தியிலேயே ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தில் போல்ட் ஆகி கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறியிருந்தார்.

- Advertisement -

என்னதான் தோனி இந்த போட்டியில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் அடுத்ததாக பீல்டிங் செய்யும்போது ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்திவிட்டு சென்றார். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜீத் சிங் வீசிய பந்தில் அசுதோஷ் சர்மா அடிக்க ஆசைப்பட்டு விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : இந்தியா டி20 உ.கோ ஜெயிக்க நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்கனும்? பொல்லார்ட் பதிலால் இந்திய ரசிகர்கள் கோபம்

அந்த கேட்சை பிடித்த மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் 150 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிலும் குறிப்பாக 146 கேட்ச்களை விக்கெட் கீப்பராகவும், 4 கேட்ச்களை வெறும் சாதாரணமான ஃபீல்டராகவும் தோனி பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement