உங்களுக்கு என்ன பிரச்சனை? சொதப்பிய டிகே’வை திட்டாத குறையாக விமர்சித்து கம்பீர் பேசியது என்ன

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்தாலும் 3வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று ஹாட்ரிக் வெற்றியை நழுவ விட்டது. இதனால் அரை இறுதிக்கு செல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பெர்த் நகரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 134 ரன்களை கட்டுப்படுத்த கடைசி ஓவர் வரை இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு போராடிய நிலையில் பேட்டிங்கில் 150 ரன்கள் எடுக்க தவறியதை தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Dinesh-Karthik

- Advertisement -

குறிப்பாக ராகுல், ரோஹித், விராட் கோலி உள்ளிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 49/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை அட்டகாசமாக பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் 68 (40) ரன்கள் குவித்து தனி ஒருவனாக தூக்கி நிறுத்தி மானத்தை காப்பாற்றினார். ஆனால் அவருடன் 6வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் கடைசி வரை அதிரடியை துவங்காத தினேஷ் கார்த்திக் மெதுவாக விளையாடி வெறும் 6 (15) ரன்களில் அவுட்டாகி ஃபினிசிங் செய்ய தவறியது முக்கிய காரணமாக அமைந்தது.

என்ன பிரச்சனை:
ஏனெனில் புதிய பந்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நிலையில் பழைய பந்தில் பினிஷிங் செய்ய வேண்டிய அவர் குறைந்தது 10 – 20 ரன்களை எக்ஸ்ட்ரா எடுத்திருந்தால் கூட இந்தியா வென்றிருக்கும். மேலும் பினிஷிங் செய்வதற்காகவே விமர்சனங்களை தாண்டி அணியில் சேர்க்கப்பட்ட அவர் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் ஒய்ட் வலையில் அவுட்டாகி வெற்றியை தாரை பார்க்க பார்த்தது உட்பட அன்றும் இன்றும் அழுத்தமான போட்டிகளில் சொதப்புவேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

RIshabh Pant Dinesh Karthik

இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே விளையாடி சதங்களை அடித்த அனுபவம் கொண்ட ரிசப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கைகள் குவிந்துள்ளன. இந்நிலையில் கடைசி ஓவர்களில் 10 – 12 பந்துகளை மட்டும் தான் எதிர்கொண்டு சிறப்பாக செயல்படுவீர்களா? முன்கூட்டியே களமிறங்கி கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முடியாதா என்று தினேஷ் கார்த்திக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். முன்னதாக சூரியகுமார், பாண்டியா ஆகியோரும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அந்த ஒரு வேலைக்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து ஒரு இடத்தை வீணடிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்த கௌதம் கம்பீர் ஏற்கனவே சொன்னது போலவே தற்போது நடந்தேறியுள்ளது.

- Advertisement -

அதனால் காட்டத்துடன் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தினேஷ் கார்த்திக்கின் பிரச்சனை என்ன? அவர் நிறைய பந்துகளை எதிர்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாமல் தவிக்கிறார். அதே சமயம் 10 – 12 பந்துகளை மட்டும் எதிர்கொண்டால் என்ன செய்ய வேண்டும் எப்படி விளையாட வேண்டும் என்ற தெளிவு அவரிடமுள்ளது. அதனால் பவுலர்களை எளிதாக அடிக்கிறார். ஆனால் 7 – 8 ஓவர்கள் முன்னதாகவே களமிறங்கினால் ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டுமா அல்லது தடுத்து விளையாட வேண்டுமா என்ற எந்த தெளிவும் அவரிடமில்லை”

Gambhir

“ஆனால் அவரிடம் உள்ள அனுபவத்திற்கு எப்போது எப்படி விளையாட வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவரிடம் அனைத்து பவுலரையும் எளிதாக எதிர்கொள்ளும் அனைத்து விதமான ஷாட்டுகளும் உள்ளது. அவர் பினிஷரும் கூட. ஆனால் உங்களது அணி 10 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தால் பார்ட்னர்ஷிப் உருவாக்கி மெதுவாக விளையாடி கடைசியில் அதிரடியாக விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : வீடியோ : எரிமலையாக வெடித்த குட்டி ஏபிடி கெயிலை முந்தி உலக சாதனை, பீல்டிங்கில் மிரட்டல் – பாராட்டிய ஏபிடி

அதை செய்த தவறிய அவர் தவறான நேரத்தில் அவுட்டானார். அதற்கு முன்பாகவும் நீங்கள் அவரைப் பார்த்தால் தன்னம்பிக்கையுடன் அந்த இன்னிங்ஸை விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் தன்னுடைய பேட்டிங்கில் பதற்றமின்மையை கொண்டிருக்கவில்லை. அவர் ஸ்ட்ரைக்கையும் மாற்றவில்லை, தன்னம்பிக்கையுடன் அதிரடியான ஷாட்களையும் விளையாடவில்லை” என்று கூறினார்.

Advertisement