WTC Final : ஒருவேளை ஃபைனலில் மழை வந்தால் – ட்ராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு? ஐசிசி கூறும் ரூல்ஸ் இதோ

IND vs AUS
- Advertisement -

வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த போட்டியில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கோப்பையை மோத உள்ளன. அதில் ஏற்கனவே 5 உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை வென்றதைப் போல முதல் முறையாக இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலே வென்று சரித்திரம் படைக்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

மறுபுறம் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் 9 வருடங்களாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த போராட உள்ளது. முன்னதாக நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் வருகையால் பெரும்பாலும் டிராவில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் மீது ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது. அதனால் நூற்றாண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளை காப்பாற்ற நினைத்த ஐசிசி 50 ஓவர், 20 ஓவர் போலவே டெஸ்ட் போட்டிகளுக்கு பிரத்தியேகமான இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையை 2019இல் அறிமுகப்படுத்தியது.

ட்ராவில் முடிந்தால்:
அதாவது தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தால் கோப்பை கிடையாது. மாறாக 2 வருடங்கள் நடைபெறும் லீக் சுற்றில் அதிக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலில் வெல்பவர்களுக்கே கோப்பை என்ற நிலைமையை ஐசிசி ஏற்படுத்தியது. அதனால் இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளும் டி20 கிரிக்கெட்டுக்கு நிகராக பரபரப்பாக நடைபெறுவதால் ரசிகர்களின் ஆர்வத்தைப் பெற்று மீண்டும் உயிர்பித்துள்ளது.

Oval

அதன் காரணமாக இந்த ஃபைனலும் நிச்சயமாக டிராவில் முடிவடைவதற்கு 90% வாய்ப்பில்லை. இருப்பினும் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத கிரிக்கெட்டில் ஒருவேளை இந்த மாபெரும் ஃபைனல் டிராவில் முடிந்தாலோ அல்லது மழை பெய்தாலோ கோப்பை யாருக்கு என்ற விவரம் பின்வருமாறு.
1. இந்த ஃபைனலில் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ஜூன் 12ஆம் தேதியை ஐசிசி ரிசர்வ் நாளை ஒதுக்கியிருந்தாலும் அது எடுத்த எடுப்பில் நடைமுறைக்கு வராது. அதாவது இப்போட்டி நடைபெறும் 5 நாட்களில் எப்போது மழை குறுக்கிட்டாலும் அதற்கான நேரத்தை அடுத்து வரும் நாட்களில் வழக்கம் போல ஈடு செய்து போட்டியின் முடிவை காண்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள்.

- Advertisement -

2. எடுத்துக்காட்டாக 2வது நாளில் மழை வந்தால் அதன் காரணமாக இழக்கும் நேரத்தை எஞ்சிய 3 நாட்களில் அரை மணி நேரம் முன்கூட்டியே போட்டியை துவக்கியும் அரை மணி நேரம் தாமதமாக போட்டியை முடித்தும் முடிவு காண நடுவர்கள் முயற்சிப்பார்கள். அதே போல 1 நாள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டாலும் அதை அடுத்து வரும் நாட்களில் ஈடு செய்ய நடுவர்கள் முயற்சிப்பார்கள்.

WTC

3. பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டிக்கு சராசரியாக 30 மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக 5 நாட்களில் 90 ஓவர்களைக் வீச தலா 6 மணி நேரங்களை கொண்ட 30 மணி நேரங்கள் ஒதுக்கப்படும். அந்த 30 மணி நேரத்தை இந்த 5 நாட்களுக்குள் ஈடு செய்ய தவறினால் மட்டுமே ஃபைனல் என்பதால் இப்போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க ரிசர்வ் நாள் கொண்டுவரப்படும்.

- Advertisement -

4. ஒருவேளை 5 நாட்களும் மழை வராமல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தால் ரிசர்வ் நாள் கொண்டுவரப்பட மாட்டாது. அதாவது 5 நாட்களும் இரு அணிகளும் கடுமையாக போராடி இறுதியில் போட்டி டிராவில் முடிந்தால் ரிசர்வ் நாள் கொண்டு வரப்படாது.

IND-vs-AUS

5. அப்படிப்பட்ட சூழ்நிலையில் போட்டி டிராவில் முடிந்தால் ஐபிஎல் 2023 ஃபைனல் போல புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை கிடையாது. மாறாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். அதே போல இந்த ஃபைனல் பரபரப்பாக நடைபெற்று டையில் முடிந்தாலும் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொடுக்கப்படும்.

இதையும் படிங்க:WTC Final : இந்தியாவுக்கு சாதகம், ஃபைனலில் கடைசி நேரத்தில் வெளியேறிய முக்கிய பவுலர் – மாற்று வீரரை அறிவித்த ஆஸி வாரியம்

6. அத்துடன் மழை குறுக்கிட்டு அதற்காக ரிசர்வ் கொண்டுவரப்பட்டு அதில் போட்டி டை அல்லது டிராவில் முடிந்தாலும் கோப்பை பகிர்ந்து கொடுக்கப்படும்

Advertisement