IND vs WI : இது ஒருநாள் போட்டியா? இல்ல டி20 போட்டியா? இப்படியா ஆடுவீங்க – வெ.இ அணியை கலாய்க்கும் ரசிகர்கள்

Mukesh
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது ஜூலை 27-ஆம் தேதி பார்படாஸ் நகரில் துவங்கியது.

IND-vs-WI

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 23 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஜடேஜா மூன்று விக்கெட்டுகளின் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்களை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Shardul-Thakur

ஏனெனில் ஒருநாள் போட்டியில் 50 ஓவர்கள் இருக்கும் வேளையில் 23 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தற்போது அவர்களை கேலி மற்றும் கிண்டலுக்கு உள்ளாக்கியுள்ளது.

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 96 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டைகளை இழந்திருந்த வேளையில் அடுத்த 18 ரன்களில் அவர்கள் மீதமுள்ள ஐந்து விக்கெட்களையும் இழந்தது அந்த அணியின் மோசமான நிலையை வெளிக்காட்டுவதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs WI : மிரட்டல் பவுலிங், வெ.இ அணியை சுருட்டி வீசிய இந்தியா – 1997க்குப்பின் 25 வருடங்கள் கழித்து அசத்தல் சாதனை

ஏற்கனவே ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை தழுவி உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு இழந்த வேளையில் இந்திய அணி இடமும் தற்போது இந்த சொதப்பலை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement