IND vs WI : முடிவுக்கு வந்த வெற்றி நடை – டி20 வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு நேர்ந்த மோசமான தோல்வி – ரசிகர்கள் சோகம்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்னடைவுக்குள்ளானது. இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று தொடரை சமன் செய்த இந்தியா ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 5, கில், சஞ்சு சாம்சன் 13, கேப்டன் பாண்டியா 14 என முக்கிய வீரர்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 61 (45) ரன்களும் இளம் வீரர் திலக் வர்மா 27 (18) ரன்களும் அதிரடியாக எடுத்து ஓரளவு காப்பாற்றினர். இருப்பினும் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

வரலாற்று தோல்வி:
அதை தொடர்ந்து 166 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு கெய்ல் மேயர்ஸ் 10 (5) ரன்னில் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக 47 (35) ரன்களும் ப்ரெண்டன் கிங் சரவெடியாக 85* (55) ரன்களும் ஷாய் ஹோப் 22* (13) ரன்களும் எடுத்து 18 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் நாங்கள் இன்னும் வீழ்ந்துவிடவில்லை என்பதை நிரூபித்து 3 – 2 (5) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்று அசத்தியது.

1. மறுபுறம் டி20 தரவரிசையில் தற்சமத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஐபிஎல் தொடரில் மிரட்டலாக செயல்பட்டு நட்சத்திர வீரர்களைக் கொண்டுள்ள இந்தியா 2016க்குப்பின் முதல் முறையாக 7 வருடங்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஒரு டி20 தொடரில் தோற்றது. கடைசியாக 2016இல் எம்எஸ் தோனி தலைமையில் வெஸ்ட் இண்டீஸிடம் 1 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா ஒரு டி20 தொடரில் தோற்றிருந்தது.

- Advertisement -

2. அதை விட சர்வதேச டி20 வரலாற்றில் முதல் முறையாக ஒரு 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக (5 – 0) இங்கிலாந்துக்கு எதிராக (3 – 2) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (2 – 2) வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக (4 – 1) என களமிறங்கிய 4 ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கி வெற்றி அல்லது சமன் மட்டுமே சந்தித்த இந்தியா முதல் முறையாக தோற்றுத் தலை குனிந்துள்ளது. அதே போல 2006 முதல் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியா ஒரு குறிப்பிட்ட தொடரில் இப்படி 3 போட்டிகளில் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

3. இது போக டி20 கிரிக்கெட்டில் கடைசியாக களமிறங்கிய 13 தொடர்களில் 11 வெற்றிகளைப் பெற்று 1 தொடரை சமன் செய்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவின் வீரநடை இந்த தோல்வியால் முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

4. அது போக அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பாக அணிக்கு எதிராக தொடர்ந்து அதிக தொடர்களில் தோல்வியடையாமல் வென்று வந்த இந்தியாவின் வெற்றி நடையும் நிறைவுக்கு வந்துள்ளது. அந்த பட்டியல்:
1. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக : 14 தொடர்கள் (2018 – 2023)
2. இலங்கைக்கு எதிராக : 13 தொடர்கள் (2012 – 2021)
3. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக : 12 தொடர்கள் (2006 – 2016)

இதையும் படிங்க:2023 உ.கோ : அவருக்கு நம்பி சான்ஸ் கொடுங்க, ஃபினிஷரா இந்தியாவ ஜெய்க்க வைப்பாரு – சொதப்பல் வீரருக்கு எம்எஸ்கே பிரசாத் ஆதரவு

5. அதே போல 2006இல் ராகுல் டிராவிட் தலைமையில் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தோற்ற இந்தியா 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக தற்போது 5 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement