2023 உ.கோ : அவருக்கு நம்பி சான்ஸ் கொடுங்க, ஃபினிஷரா இந்தியாவ ஜெய்க்க வைப்பாரு – சொதப்பல் வீரருக்கு எம்எஸ்கே பிரசாத் ஆதரவு

MSK Prasad 2
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலகக் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க போகும் ஐசிசி 2023 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் அசத்தக்கூடிய இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இருப்பினும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பதும் மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இருப்பதும் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அதை விட முக்கியமான 4வது பேட்டிங் இடத்தில் விளையாடுவதற்கு 2019 உலக கோப்பைக்குப்பின் 4 வருடங்கள் கழிந்தும் இதுவரை போதுமான வீரர்கள் இல்லாதது மற்றுமொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தாலும் தற்போது காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலான மாற்று பேக்-அப் வீரர் கிடைக்காமல் இந்தியா திண்டாடி வருகிறது.

- Advertisement -

ஃபினிஷரா செயல்படுவாரு:
முன்னதாக அந்த இடத்தில் சோதிக்கப்பட்ட பல வீரர்களில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது என்றே சொல்லலாம். ஏனெனில் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் உட்பட டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே 360 டிகிரியலும் சரமாரியாக அடித்து நொறுக்கி இந்தியாவுக்கும் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவர் சற்று நிதானமாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ரொம்பவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதற்குள் அசால்டாக 3 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 26 போட்டிகளில் 511 ரன்களை 24.33 என்ற மோசமான சராசரியில் குவித்து அதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவது ரசிகர்களுக்கு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் சூரியகுமார் யாதவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட வேலையை ஒதுக்காத காரணத்தாலேயே தடுமாறுவதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே டி20 கிரிக்கெட்டில் மிகவும் அழுத்தமான மிடில் ஆர்டரில் குறைந்த பந்துகளில் அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டுள்ள அவருக்கு நம்பி ஃபினிஷிங் செய்யும் வேலையை கொடுத்தால் 2023 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கான வேலை கிடைக்கவில்லை என்று நான் கருதுகிறேன். ஒருவேளை தன்னுடைய வேலைக்கு தகுந்த தனது பங்கை பிடித்து அதற்கேற்ப அவர் விளையாடினால் உலக கோப்பையில் இந்தியாவுக்கு சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவராகவும் சிறந்த ஃபினிஷராகவும் இருப்பார் என்று நம்புகிறேன்”

“நிறைய திறமை இருக்கும் அவருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். தற்போது ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோர் அவருடைய விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். குறிப்பாக அவர்கள் அவருக்கு எந்த வேலையை செய்ய வேண்டும் என்ற தெளிவை கொடுத்துள்ளார்கள். அது நிச்சயமாக அவருக்கு உதவும். ஏனெனில் ஃபினிஷிங் செய்யும் சூழ்நிலையில் விளையாடும் வேலையை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வார். அது சூரியகுமார் யாதாவுக்கும் நிம்மதியை கொடுத்து அதற்கேற்றார் போல் திட்டமிட்டு விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs WI : கேஎல் ராகுலை மிஞ்சிய சுப்மன் கில் – மோசமான தடவல் சாதனையை உடைத்து படுமோசமான சாதனை, ரசிகர்கள் அதிருப்தி

அதாவது 4வது இடத்தை விட லோயர் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி அடிக்கும் வாய்ப்பை பெறும் போது டி20 கிரிக்கெட் போலவே சூரியகுமார் ஒருநாள் போட்டிகளிலும் அசத்துவார் என்று பிரசாத் நம்பிக்கை தெரிவிக்கிறார். இருப்பினும் ஏற்கனவே கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறியதால் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்ததே பார்க்க வேண்டும்.

Advertisement