IND vs WI : கேஎல் ராகுலை மிஞ்சிய சுப்மன் கில் – மோசமான சாதனையை உடைத்து படுமோசமான சாதனை, ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோற்ற இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை சமன் செய்தது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 61 ரன்களும் திலக் வர்மா 27 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 166 ரன்கள் துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு கெய்ல் மேயர்ஸ் 10 ரன்களில் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் 47 (35) ரன்களும் பிரண்டிங் கிங் 85* ரன்களும் எடுத்து 18 ஓவரிலேயே எளிதான வெற்றி பெற வைத்தனர். அதனால் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2016க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்து தலைகுனிவுடன் நாடு திரும்பியுள்ளது.

- Advertisement -

முன்னதாக இத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் சவாலான மைதானங்களில் 3, 7, 6 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்த சுப்மன் கில் 4வது போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தில் 77 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். ஆனால் மீண்டும் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டியில் அடித்து நொறுக்க வேண்டிய அவர் 9 ரன்னில் அவுட்டாகி கைவிட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. மொத்தத்தில் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவர் 3, 7, 6, 77, 9 என 4 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான இந்திய வீரர் என்ற கேஎல் ராகுல் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேஎல் ராகுல் 1, 0, 0, 14 என முதல் 4 போட்டிகளில் வரலாற்றில் அதிகபட்சமாக 3 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சாதனை படைத்ததால் கடைசிப் போட்டியில் நீக்கப்பட்டார்.

- Advertisement -

அப்படி 3 முறை அவுட்டான அவரையும் மிஞ்சி தற்போது மோசமான சாதனை படைத்துள்ள கில் ஐபிஎல் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருந்தும் இந்தியாவுக்காக இத்தொடரில் இப்படி மோசமாக செயல்பட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர்நாயகன் விருது வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து அசத்தி 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் கோப்பையை வெல்ல உதவினார்.

அப்போதிலிருந்து கிடைத்த நிலையான வாய்ப்புகளில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து அசத்திய அவரை சச்சின், விராட் கோலி வரிசையில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பிய அவர் தற்சமயத்தில் பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்த சுற்றுப்பயணத்தில் 11 இன்னிங்ஸில் வெறும் 2 அரை சதம் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

இதையும் படிங்க:IND vs WI : பலவீனமான வெ.இ அணியிடம் சொதப்பல், 2016க்கு பின்பும் 17 வருடங்கள் கழித்தும் இந்தியா 2 அவமான தோல்வியை சந்தித்தது எப்படி?

அதிலும் குறிப்பாக தமது டி20 கேரியரில் ஆரம்பம் முதலே தடுமாறும் அவர் அகமதாபாத் மற்றும் லாடர்ஹில் ஆகிய பேட்டிங்க்கு சாதகமான மைதானங்களில் 3 போட்டிகளில் 212 ரன்கள் அடித்துள்ளார். ஆனால் சவாலான மைதானங்களில் களமிறங்கிய எஞ்சிய 8 போட்டிகளில் 92 ரன்கள் மட்டுமே அடித்து திணறி வருவதால் இவர் பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தில் மட்டுமே அடிப்பார் என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் ரசிகர்கள் அதற்குள் சச்சின், விராட் கோலியுடன் தவறாக கம்பேர் செய்து விட்டோம் என்றும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement