2016ல எப்படி இருந்தாரோ அந்த கோலியை பாக்கப்போறீங்க – எதிரணிகளை எச்சரிக்கும் முன்னாள் ஜாம்பவான்

Kohli
- Advertisement -

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு முதல்முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்குகிறது. குறிப்பாக புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள டு பிளேஸிஸ் தலைமையில் புதிய ஜெர்சியுடன் புத்துணர்ச்சியுடன் இந்த சீசனை தொடங்கும் அந்த அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மார்ச் 27-ஆம் தேதி இரவு எதிர்கொள்கிறது.

Faf Du Plessis RCB

- Advertisement -

விஸ்வரூபம் எடுப்பாரா கிங் கோலி:
இந்த போட்டிக்காக பெங்களூரு அணி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இந்த போட்டி மட்டுமல்லாது இந்த வருடம் அந்த அணி முதல் முறையாக கோப்பையை முத்தமிட வேண்டுமெனில் அதற்கு அந்த அணியின் நட்சத்திரம் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியமாகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது பெங்களூர் அணிக்காக ஒப்பந்தமான அவர் தொடர்ந்து அந்த அணியில் இன்று வரை விளையாடி வருவதால் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக விளையாடி வரும் ஒரே வீரர் என்ற அரிதான சாதனையும் படைத்துள்ளார்.

குறிப்பாக கடந்த 2013 – 2021 வரை அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அவர் பேட்டிங்கில் ரன் மழை பொழிந்து கோப்பையை வெல்வதற்காக முழுமூச்சுடன் தொடர்ந்து போராடினார். இருப்பினும் முக்கியமான நேரத்தில் அந்த அணியும் அவரும் சொதப்பிய காரணத்தால் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த அவர் பணிச்சுமை காரணமாக கடந்த வருடம் இந்தியாவின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய போது பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். அதன் காரணமாக 2012-க்கு பின் மீண்டும் இந்த வருடம் பெங்களூர் அணியில் ஒரு சாதாரண வீரராக எந்தவித அழுத்தமும் பணிச்சுமையுமின்றி சுதந்திரமாக விளையாட உள்ளார்.

RCB

2016 கிங் கோலி ரிட்டர்ன் வருவார்:
இந்நிலையில் தற்போது கேப்டன் சுமை இல்லாத காரணத்தால் 2016-ஆம் ஆண்டு சீறிப்பாய்ந்த விராட் கோலியை மீண்டும் இந்த வருடம் பார்க்க முடியும் என இந்தியாவின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போதைய நிலைமையில் அவர் மீண்டும் கேப்டன்ஷிப் செய்வாரா என்பது தெரியாது. இருப்பினும் ஒரு சில நேரங்களில் தலையில் இருந்த கேப்டன் சுமை கீழே இறங்கும் போது அணியில் இருக்கும் எஞ்சிய 10 வீரர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்பதால் ஒரு சில வீரர்கள் அபாரமாக செயல்பட தொடங்குவார்கள். ஏனெனில் ஒரு அணியின் கேப்டனாக நீங்கள் இருக்கும்போது அந்த அணியில் இருக்கும் மீதி 10 பேரைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும்.

- Advertisement -

அதேபோல் அணியில் இடம் பெறாத வீரர்களைப் பற்றியும் அவர்களின் பார்ம் பற்றியும் அணியின் நன்மைக்காக எதை செய்ய வேண்டும் என்பது போன்ற பலவற்றை சிந்தித்து கவலைப்பட வேண்டி இருக்கும். தற்போது அது போன்ற சிந்தனைகள் இருக்காது என்பதால் கடந்த 2016-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 1000 ரன்களை அடித்த அதிரடி விராட் கோலியை இந்த வருடம் மீண்டும் பார்க்க முடியும் என தோன்றுகிறது” என கூறினார்.

Gavaskar

இதுவரை 199 இன்னிங்ஸ்களில் 6283 ரன்களை அடித்துள்ள விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். இருப்பினும் கடந்த 2019-க்கு பின் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க முடியாமல் தடுமாறுவதைப் போலவே ஐபிஎல் தொடரிலும் அவர் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

மேலும் கடந்த வருடம் வரை இந்தியாவின் 3 வகையான கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டன்ஷிப் என 4 பொறுப்புகளை வகித்த காரணத்தால் ஏற்பட்ட அதீத பணிச்சுமை காரணமாக தனது பேட்டிங் பாதிப்படைந்ததாக உணர்ந்த விராட் கோலி அதன் காரணமாகவே படிப்படியாக கேப்டன் பதவியில் இருந்து விலகி தற்போது சாதாரண வீரராக சுதந்திரமாக விளையாட முடிவு எடுத்துள்ளார்.

எனவே தற்போது எந்தவித அழுத்தமும் இல்லாத காரணத்தால் சுதந்திரப் பறவையாக விராட் கோலி விளையாடுவார் என்பதால் கடந்த 2016-ஆம் ஆண்டு விளையாடிய விராட் கோலியை மீண்டும் பார்க்க முடியும் என சுனில் கவாஸ்கர் எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் கடந்த 2016-ஆம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் பைனல் உட்பட 16 போட்டிகளில் 973 ரன்களை எடுத்து பெங்களூர் அணிக்கு முதல் முறையாக கோப்பையை வெல்ல தனி ஒருவனாக போராடினார் என்றே கூறலாம்.

- Advertisement -

ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் சொதப்பிய அந்த அணி கோப்பையை தாரை வார்த்து விட்டு வெறும் கையுடன் திரும்பியது. இருப்பினும் அந்த வருடம் விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள், சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் போன்ற பல சாதனைகளைப் படைத்தார். சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்த எம்எஸ் தோனி 40 வயதை கடந்து விட்டதால் சென்னை அணியின் நலனை கருத்தில் கொண்டு காலம் காலமாக வகித்து வந்த கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஒரே நோபால் தான். நொறுங்கிய கோடிக்கணக்கான இதயங்கள் – உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்தியா

அவர் தலைமையில் முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக விளையாடிய அவர் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் 82/5 என்ற மோசமான நிலையில் சென்னை தவித்த போது 38 பந்துகளில் அதிரடியாக 50* ரன்கள் குவித்து பழைய தோனியாக அவதாரம் எடுத்துள்ளார். குறிப்பாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வந்த அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய முதல் போட்டியிலேயே பழைய பன்னீர்செல்வமாக திரும்பியது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் 40 வயதை கடந்துள்ள அவரே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின் சிறப்பாக விளையாடுகிறார் என்றால் 33 வயது நிரம்பிய விராட் கோலி நிச்சயம் இந்த தொடரில் எதிரணிகளை பந்தாடுவார் என சந்தேகமின்றி நம்பலாம்.

Advertisement