டாப் 2 டீம்ல விராட் – ஸ்மித் இருந்தும் அதை பாக்க முடியல, அப்படி நேர்மையின்றி எதுக்கு விளையாடனும்? பிசிசிஐக்கு சபா கரீம் கேள்வி

Karim
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆரம்பத்திலேயே கோப்பையை தக்க வைத்தது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் படுதோல்வியை சந்தித்த இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

முன்னதாக டெல்லி மற்றும் நாக்பூரில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளை விட இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி என்றளவுக்கு பிட்ச் தாறுமாறாக சுழன்றது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் முதல் இன்னிங்ஸில் புஜாராவும் 2வது இன்னிங்ஸில் விராட் கோலியும் மோசமான பேட்டிங்கால் அவுட்டாகவில்லை. மாறாக கணிக்க முடியாத அளவுக்கு தாறுமாறாக திடீரென்று சுழன்று வந்த பந்துகளால் அவுட்டானார்கள்.

நேர்மையை இழந்துட்டோம்:
மேலும் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் அதற்காக முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழல்வது இந்திய ரசிகர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது. ஒரு காலத்தில் வீரேந்தர் சேவாக் சென்னை மைதானத்தில் 300 ரன்கள் அடித்த பிட்ச்களை இப்போதெல்லாம் இந்தியாவில் பார்ப்பது அரிதாகி விட்டது. அந்த நிலையில் இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக அறிவித்து அதற்கு 3 கருப்பு புள்ளிகளை ஐசிசி தண்டனையாக அறிவித்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற வேண்டும் என்பதற்காக சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்து இந்தியா நேர்மைக்கு புறம்பாக செயல்படுவதாக முன்னாள் வீரர் சபா கரீம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Pujara

குறிப்பாக உலகின் டாப் 2 அணிகளான இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் போட்டியை முழுமையாக 4, 5 நாட்கள் பார்க்க முடியாத அளவுக்கு விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அரை சதம் அடிப்பதை கூட பார்த்து மகிழ்ச்சியடைய முடியாத அளவுக்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடி வெற்றி கண்டு என்ன செய்யப் போகிறோம் என்றும் அவர் பிசிசிஐக்கு மற்றும் இந்திய அணி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது சுழலுக்கு சாதகமான மைதானங்களால் டெஸ்ட் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் பார்க்க முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இதில் ஐசிசி தலையிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலியாவிடம் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இந்தியாவிடம் விராட் கோலி உள்ளார். இவர்கள் சந்தேகமின்றி உலகின் டாப் பேட்ஸ்மேன்கள். ஆனால் இந்த தொடரில் இதுவரை அவர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்க முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இது போன்ற பிட்ச்சிகளை உருவாக்கி நாம் எதை நிரூபிக்க போகிறோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற வேண்டும் என்ற நம்முடைய அதீத ஆர்வத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நேர்மை தன்மையை நாம் இழந்து விட்டோம்”

Karim

“இந்த தொடரில் நாம் உலகின் நம்பர் ஒன் மற்றும் 2 அணிகள் மோதுவதை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். அதில் அனைத்தும் சமமாக இருந்தால் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மோசமான அறிகுறியை காட்டுகிறது. இது போன்ற பிட்ச்களில் விளையாடுவதில் என்ன பயன்? என்னைக் கேட்டால் இதில் அனைத்து வாரியங்களும் ஐசிசியும் ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மண்ணில் தங்களது பலத்திற்கேற்ற பிட்ச்களை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக உருவாக்கத் துவங்கி விடுவார்கள்”

இதையும் படிங்க:IND vs AUS : அந்த இந்திய வீரரை பார்த்து இளம்வீரர்கள் எவ்வாறு பேட்டிங் செய்யனும்னு கத்துக்கனும் – நாதன் லயன் கருத்து

“குறிப்பாக ஆஸ்திரேலியா ஃபைனலுக்கு தகுதி பெற வேண்டும் என்பதற்காக 5 மில்லி மீட்டர் பச்சை புற்கள் கூடிய பிட்ச்சை உருவாக்கி தென்னாப்பிரிக்காவை இரண்டரை நாட்களில் தோற்கடித்தது. இந்தியாவிலும் அதே போன்ற அணுகுமுறை கையாளப்படுவதால் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் இரண்டரை நாட்களில் முடிந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement