IND vs AUS : அந்த இந்திய வீரரை பார்த்து இளம்வீரர்கள் எவ்வாறு பேட்டிங் செய்யனும்னு கத்துக்கனும் – நாதன் லயன் கருத்து

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 88 ரன்கள் பின்னிலை பெற்ற இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களை மட்டுமே குவித்தது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

இதன் காரணமாக 76 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 78 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் பெரிய அளவில் ரன்களை குவிக்காத போது புஜாரா மட்டும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய அணிக்காக தனியொருவராக போராடினார். குறிப்பாக 142 பந்துகளை சந்தித்த அவர் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 59 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார்.

Pujara-1

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்கள் புஜாராவிடம் இருந்து எப்படி பேட்டிங் செய்வது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து எங்களுக்கு மூன்றாவது போட்டிக்காக தயாராக சரியான ஓய்வு கிடைத்தது.

- Advertisement -

அதனை பயன்படுத்திக் கொண்டு அணியை சரியாக கட்டமைத்தோம். இந்திய அணி திறமையான பலவீரர்களை கொண்டது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் அவர்களை எதிர்த்து விளையாடுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஆனால் நம்பிக்கையுடன் நான் பந்து வீசியதாலே இந்திய அணியின் வீரர்களை என்னால் வீழ்த்த முடிந்தது. ஒவ்வொரு பந்தையம் வெவ்வேறு விதமாக வீசினேன்.

இதையும் படிங்க : வீடியோ : தல தோனி சென்னை வந்ததும் தடபுடலாக மலர்தூவி வரவேற்ற ரசிகர்கள் சென்னை வந்தது எதற்கு தெரியுமா?

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரரான புஜாரா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இறுதியில் அவரை ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் பிடித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு டெஸ்ட் போட்டியின் இக்கட்டான நேரத்தில் எப்படி விளையாடுவது என்பதை புஜாராவிடம் இருந்து வளர்ந்து வரும் இந்திய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நேதன் லயன் அவரை பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement