ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்க அந்த ஒரு விஷயம் போதும் – முன்னாள் பாக் கேப்டன் நம்பிக்கை

Asia Cup
- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியன் தீர்மானிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15வது முறையாக வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் ஆசியாவின் டாப் 6 அணிகள் மோதுகின்றன. இதற்காக அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் துபாயில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இரு தரப்பு தொடர்களில் மோதாமல் இதுபோல் ஆசிய மற்றும் உலக கோவையில் மட்டும் மோதி வருகிறது.

INDvsPAK

- Advertisement -

அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளுக்கு மவுசு பல மடங்கு எகிறியுள்ள நிலையில் இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. கடைசியாக இவ்விரு அணிகளும் இதே துபாய் மைதானத்தில் கடந்த வருடம் நடந்த டி20 உலக கோப்பையில் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக உலக கோப்பையில் தோற்கடித்து சரித்திரத்தை மாற்றி எழுதியது. அதனால் அவமானத்தை சந்தித்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையில் பாகிஸ்தானை தோற்கடித்து பழி தீர்க்குமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆசிய சாம்பியன்:
கடந்த வருடம் தோல்விக்கு முக்கிய பங்காற்றிய சாஹீன் அப்ரிடி இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் காயத்தால் இடம் பெறுவது சந்தேகமாகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் போன்ற குறைவான உலகத்தரம் வாய்ந்த வீரர்களை மட்டுமே பாகிஸ்தான் அணியில் உள்ளனர். ஆனால் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என கிட்டத்தட்ட அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பலமான தரமான வீரர்களாக இருக்கின்றனர்.

pakisthan IND vs PAK

மேலும் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 14 தொடர்களில் 7 கோப்பைகளை வென்று கடைசியாக வெற்றிகரமான அணியாகவும் திகழும் இந்தியா கடந்த 2018இல் இதே துபாயில் நடந்த 50 ஓவர் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்று இம்முறை நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. எனவே இம்முறையும் பாகிஸ்தான் உட்பட எஞ்சிய அனைத்து அணிகளையும் தோற்கடித்து இந்தியா 8வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

காலசூழ்நிலை சாதகம்:
இந்நிலையில் இத்தொடர் நடைபெறும் துபாயில் கடந்த பல வருடங்களாக விளையாடி 2வது வீடு போன்ற அனுபவத்தை பாகிஸ்தான் கொண்டிருப்பதால் இந்தியாவை அணிகளை தோற்கடித்து ஆசிய கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். என்னதான் இந்தியா வலுவான அணியாக இருந்தாலும் ஐபிஎல் 2021 தொடரின் ஒரு பகுதியை இங்கு விளையாடியிருந்தாலும் துபாய் கால சூழ்நிலைகள் பாகிஸ்தானுக்கு சாதகமானதாக உள்ளதாக கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Sarfaraz-1

“எந்த தொடராக இருந்தாலும் அதனுடைய முதல் போட்டி தான் அந்த தொடரின் நல்ல போக்கை அமைத்துக் கொடுக்கும். அந்த வகையில் எங்களுடைய முதல் போட்டி இந்தியாவுக்கு எதிராக உள்ளது. கடந்த வருடம் இதே மைதானத்தில் இந்தியாவை நாங்கள் சந்தித்த போது பாகிஸ்தான் வென்றதால் இப்போட்டியிலும் வெல்வோம் என்ற நம்பிக்கை அதிகமாக எங்களுக்கு உள்ளது. இங்குள்ள கால சூழ்நிலைகளை பாகிஸ்தான் நன்கு அறிந்துள்ளது. ஏனெனில் துபாயில் நாங்கள் பிஎஸ்எல் தொடரையும் நிறைய சர்வதேச தொடர்களையும் விளையாடியுள்ளோம்”

- Advertisement -

“இங்கு இந்தியாவும் ஒருசில ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் இங்குள்ள கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடும் அதிகப்படியான அனுபவம் அவர்களிடம் இல்லை. மேலும் இந்த முக்கிய போட்டியில் பாகிஸ்தானுக்கு சாகின் அப்ரிடி விளையாடுவது முக்கியமானதாகும். தற்போதைய இந்திய அணியை நீங்கள் பார்க்கும்போது அவர்கள் மிகச்சிறந்த கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். ஆனால் எங்களுடைய அணி சமீப காலங்களில் குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs ZIM : மார்க் வாக் மாதிரி அட்டகாசமா ஆடுறாரு – இளம் இந்திய வீரரை மனதார பாராட்டும் முன்னாள் பாக் வீரர்

இருப்பினும் இதே துபாய் மண்ணில் வரலாற்றிலே அதிகபட்சமாக இந்தியா மட்டும்தான் 2 ஆசிய கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் உலகின் எந்த விதமான காலச் சூழ்நிலைகளுக்கு உடனடியாக உட்படுத்திக் கொண்டு வெற்றிகளை குவிக்கும் அணியாகவே இந்தியா இருந்து வருவதால் இந்த துபாயிலும் வெற்றி நடை போடும் என்று நம்பலாம்.

Advertisement