என்னோட பரிசா அவரோட விக்கெட்டை எடுப்பேன்.. இந்தியாவை சாய்க்க பிளான் ரெடி.. நெதர்லாந்து வீரர் பேட்டி

Aryan Dutt
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் முதல் 6 லீக் போட்டிகளில் 6 தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை மிஞ்சி முதலிடம் பிடித்துள்ள இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளை எதிர்கொள்ளும் இந்தியா தங்களுடைய கடைசி போட்டியில் கத்துக்குட்டியான நெடிலாந்தை எதிர்கொள்கிறது. கடைசியாக கடந்த 2011 உலகக்கோப்பையில் இந்தியாவில் விளையாடியிருந்த நெதர்லாந்து பல போராட்டத்திற்கு பின் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற ஃகுவாலிபயர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஃபைனல் வரை வந்ததால் இம்முறை மீண்டும் விளையாட தகுதி பெற்றது.

- Advertisement -

பரிசு விக்கெட்:
அதில் எளிதாக 400 ரன்களை எதிரணிகளைப் பந்தாடிய வலுவான தென்னாப்பிரிக்காவை அசால்டாக தரம்சாலா நகரில் தோற்கடித்த நெதர்லாந்து மாபெரும் சாதனை படைத்தது. அத்துடன் வங்கதேசத்தையும் வீழ்த்திய அந்த அணி உண்மையாகவே இந்த தொடரில் நடப்பின் சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் ஆசிய சாம்பியன் இலங்கை போன்ற அணிகளை விட சிறப்பாக செயல்பட்டு இந்திய ரசிகர்களின் பாராட்டுகளையே அள்ளி வருகிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்தியாவை உலகக் கோப்பையில் தோற்கடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான தன்னம்பிக்கையும் திட்டமும் தங்களிடம் இருப்பதாக நெதர்லாந்தின் சுழல் பந்து வீச்சாளர் ஆர்யன் தத் கூறியுள்ளார். குறிப்பாக இந்திய வம்சாவளி வீரரான அவர் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்து தமக்கு தாமே பரிசு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து விக்கெட்டுகளும் எனக்கு முக்கியமாகும். ஆனால் இம்முறை விராட் கோலியை அவுட்டாக்குவதை நான் விரும்புகிறேன். அது இந்த உலகக் கோப்பையில் எனக்கு கிடைக்கும் சிறந்த பரிசாகவும் நான் கருதுவேன். என்னுடைய பலத்தை நம்பும் நான் என்னை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை”

இதையும் படிங்க: இந்தியா – இலங்கை மோதும் வான்கடே மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“மேலும் தொடர்ச்சியாக சரியான லென்த்தை பின்பற்றி என்னுடைய வேகத்தை பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேனை அவுட்டாக்குதில் மட்டுமே என்னுடைய கவனம் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சில திட்டங்களை வைத்துள்ளோம். அவர்கள் இந்த தொடரில் மிகவும் சவாலான அணியாக இருக்கின்றனர். இருப்பினும் எங்களுடைய வெற்றிப் பயணத்தில் தொடர்ந்து போராடும் நாங்கள் செமி ஃபைனலுக்கு செல்வதற்கு போராட உள்ளோம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement