விராட் கோலி, ரோஹித்தை சீக்கிரம் தூக்க அந்த பிளான் ரெடியா வெச்சிருக்கோம் – நேபாள் கேப்டன் தில்லான பேட்டி

Rohit Powdel
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 8வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இருப்பினும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய இந்தியாவின் முதல் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மறுபுறம் நேபாளை தன்னுடைய முதல் போட்டியில் தோற்கடித்த பாகிஸ்தான் மொத்தம் 3 புள்ளிகளை பெற்று குரூப் ஏ புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

எனவே 1 புள்ளியை மட்டுமே பெற்றுள்ள இந்தியா செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறும் தங்களுடைய 2வது போட்டியில் நேபாளை தோற்கடித்தால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் உள்ளது. இந்திய அணியை பொறுத்த வரை முதல் போட்டியில் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானின் தரமான வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது பெரிய பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் கடைசியில் பலவீனமாக இருக்கிறது என்று கருதப்பட்ட மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்தியாவை ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

பிளான் போட்ருக்கோம்:
இருப்பினும் நேபாள் கத்துக்குட்டியாக பார்க்கப்படுவதால் மழை வந்து தடுக்காமல் இருக்கும் பட்சத்தில் எவ்விதமான சிரமமும் இன்றி நிச்சயமாக இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழையே வந்து போட்டி ரத்து செய்யப்பட்டாலும் 2 புள்ளிகளுடன் இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது. இந்நிலையில் தாங்கள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு உத்வேகமாக இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை இப்போட்டியில் அவுட்டாக்கி தங்களது நாட்டுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக நேபால் கேப்டன் ரோகித் பௌடேல் கூறியுள்ளார்.

இது பற்றி அப்போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். குறிப்பாக இந்த பெரிய போட்டியில் நேபாள் அணிக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். அதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அந்த 10 வருடங்களாக அவர்களுடைய நாட்டின் நட்சத்திரங்களாக இருக்கின்றனர்”

- Advertisement -

“எனவே அவர்களை சாய்ப்பதற்காக சில திட்டங்களை வகுத்துள்ள நாங்கள் அதை போட்டியில் வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்று நம்புகிறேன். மேலும் விராட் கோலி எங்கள் அனைவருக்குமே உத்வேகத்தை கொடுப்பவராக இருக்கிறார். குறிப்பாக வேலையில் மட்டுமின்றி களத்திற்கும் களத்திற்கு வெளியேயும் அவர் பலவற்றில் சிறந்தவராக இருக்கிறார். இந்த இடத்திற்கு வருவதற்காக எங்களுடைய வீரர்கள் கடந்த 2 – 3 வருடங்களாக கடினமாக உழைத்துள்ளனர். அதனால் தான் நாங்களும் இங்கே இருக்கிறோம்”

இதையும் படிங்க: சீனியர்களா கொஞ்சம் யோசிங்க. அதை விட்டுட்டு அவங்கள வாட்டி எடுக்காதீங்க – விராட், ரோஹித்தை விமர்சித்த கம்பீர்

“கடந்த 2 – 3 தலைமுறைகளாக எங்களுடைய சீனியர்கள் நிறைய முயற்சித்தார்கள். எனவே அவர்களை இந்த போட்டியில் நாங்கள் பிரதிபலிக்கும் வகையில் விளையாட உள்ளோம்” என்று கூறினார். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்த நேபாள் இந்த போட்டியில் தோற்றாலும் அல்லது மழை வந்து 1 புள்ளி பெற்றாலும் லீக் சுற்றுடன் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement