சீனியர்களா கொஞ்சம் யோசிங்க. அதை விட்டுட்டு அவங்கள வாட்டி எடுக்காதீங்க – விராட், ரோஹித்தை விமர்சித்த கம்பீர்

Gautam Gambhir Rohit Sharma Virat Kohli
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி 48.5 ஓவரில் 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இசான் கிசான் 82 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 87 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து பாகிஸ்தான் சேசிங் செய்ய துவங்கிய போது வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கொடுக்கப்பட்டது. முன்னதாக அந்த போட்டியில் சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாகின் அப்ரிடிக்கு எதிராக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்தியாவை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே க்ளீன் போல்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்த அவர்களால் 66/4 என சரிந்த இந்தியாவை நல்லவேளையாக மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடி ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

சீனியர்கள் எதுக்கு இருக்கீங்க:
அதிலும் பொதுவாகவே துவக்க வீரராக களமிறங்கக்கூடிய இசான் கிசான் காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக இப்போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சூழ்நிலைக்கேற்றார் போல் தம்மை உட்படுத்தி மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார். இந்நிலையில் அழுத்தமான மிடில் ஆர்டரில் இசான் கிசான் போன்ற இளம் வீரரை களமிறக்கி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பதிலாக சீனியர்களாக பொறுப்புடன் ரோகித் சர்மா அல்லது விராட் கோலி ஆகியோர் விளையாடியிருக்க வேண்டுமென கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவக்க வீரராக களமிறங்கி அரை சதங்களை அடித்த இஷான் கிசான் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். என்னை கேட்டால் சீனியர் வீரர்கள் தான் மிகவும் கடினமான இடத்தில் விளையாட வேண்டும். குறிப்பாக 4வது இடத்தில் ஒருவர் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருக்க வேண்டும். அதாவது எப்போதுமே சீனியர்கள் அணியில் இருக்கும் கடினமான வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

“அதே போல இளம் வீரர்களுக்கு இயற்கையாக விளையாடக்கூடிய இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்து திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக கடந்த 10 வருடங்களாக விளையாடி நல்ல அனுபவத்தை கொண்டுள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 4வது இடத்தில் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவானால் அணியின் நலனுக்காக விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: IND vs NEP : பும்ராவின் வெளியேற்றத்தால் முகமது ஷமிக்கு அடித்த அதிஷ்டம் – இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

இருப்பினும் நன்கு விளையாடி செட்டிலாகியுள்ள விராட் கோலி போன்ற வீரர்களின் இடங்களை மாற்ற முடியாது என்று கேப்டன் ரோகித் சர்மா இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நேபாளுக்கு எதிரான தன்னுடைய 2வது போட்டியில் வென்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement