IND vs NEP : பும்ராவின் வெளியேற்றத்தால் முகமது ஷமிக்கு அடித்த அதிஷ்டம் – இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

Bumrah-and-Shami
- Advertisement -

இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. ஆனாலும் அந்த போட்டி மழையால் தடைபட்டதால் இரு அணிகளுக்குமே ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக களத்தில் இருந்த அம்பயர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் இரண்டாவது போட்டியாக செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ள நேபாள் அணிக்கு எதிரான போட்டி அமைய இருக்கிறது. இந்நிலையில் இந்த நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று அவர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்று இருப்பதாகவும், தனது தனிப்பட்ட வேலைகள் காரணமாகவே அவர் நாடு திரும்பியிருப்பதாகவும் மீண்டும் அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் சூப்பர் ஃபோர் சுற்றுக்கான போட்டியிலே அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நேபாள் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்பதனால் அவருக்கு பதிலாக அந்த இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்த முகமது ஷமி கடந்த போட்டியில் ஷர்துல் தாகூர் ஆல் ரவுண்டராக அணியில் இடம் பெற்றிருந்ததால் விளையாட முடியாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பும்ராவின் இந்த வெளியேற்றம் காரணமாக அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. நேபாள் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக சூப்பர் போர் சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இலங்கையில் இருந்து திடீரென நாடு திரும்பிய பும்ரா. அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் – காரணம் என்ன?

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்கிவரும் முகமது ஷமி உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வரும் வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் விளையாடுவது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதோடு தொடர்ச்சியாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் முகமது ஷமியின் பந்துவீச்சு நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று கூறலாம்.

Advertisement