இலங்கையில் இருந்து திடீரென நாடு திரும்பிய பும்ரா. அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் – காரணம் என்ன?

Bumrah
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் அடங்கிய குழுவில் இடம் பெற்றிருந்த இந்திய அணியானது செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டி நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கலந்து கொண்டது.

அந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 266 ரன்கள் அடித்திருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸ் மழை காரணமாக நடைபெறாமல் போனதால் இரு அணிகளுக்குமே தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக போட்டியின் நடுவர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் நாளை செப்டம்பர் நான்காம் தேதி நேபாள் அடிக்கு எதிராக அதே மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா நாளைய நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொழும்புவில் இருந்து மும்பைக்கு அவர் விமானம் மூலம் புறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான காரணம் யாதெனில் :

- Advertisement -

ஜஸ்ப்ரீத் பும்ரா தனது தனிப்பட்ட சொந்த வேலைகள் காரணமாக மும்பை சென்றுள்ளார் என்றும் அவர் எப்பொழுது திரும்பி வருவார் என்பது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் சூப்பர் ஃபோர் சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்து இல்ல. உலககோப்பையை ஜெயிக்க இந்த 3 அணிகளுக்கு தான் வாய்ப்பு அதிகம் – டூபிளெஸ்ஸிஸ் கணிப்பு

ஏற்கனவே கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா அயர்லாந்து அணிக்கெதிரான தொடரில் கேப்டனாக அசத்திய வேளையில் தற்போது மீண்டும் அவர் அணியில் இருந்து வெளியேறி நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யும் செய்தியாக மாறியுள்ளது.

Advertisement