கேப்டன்ஷிப் எல்லாம் சரிதான் – ஆனால் 4 ஓவர் பவுலிங் என்னாச்சு? பாண்டியாவுக்கு முன்னாள் கேப்டன் கேள்வி

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைத்துள்ளது. அதிலும் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் குறைவான நட்சத்திர வீரர்களுடன் நிறைய அனுபவமில்லாத வீரர்களை வைத்து சொல்லி அடித்த அந்த அணி கொஞ்சம் கூட தடுமாறாமல் நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்று ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைத்துள்ளது. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட ஹர்திக் பாண்டியாவை வேறு வழியின்றி மீண்டும் தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

Pandya

- Advertisement -

கடந்த வருடம் காயமடைந்த ஹர்திக் பாண்டியா அதிலிருந்து முழுமையாக குணமடையாமல் மும்பைக்காக 2021இல் விளையாடிய போது பந்து வீசாமல் பேட்டிங் மட்டுமே சுமாராக செய்து வந்தார். இருப்பினும் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கருதப்படும் அவர் இந்தியாவுக்காக பந்து வீசுவார் என்ற நம்பிக்கையில் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.

சாம்பியன் பாண்டியா:
அதேபோல் அந்த உலகக் கோப்பை முழுவதும் ஒருசில போட்டிகளில் மட்டுமே பந்து வீசிய அவர் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டது இறுதியில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத படுதோல்வியை இந்தியாவுக்கு பரிசளித்தது. அதனால் கடுப்பான இந்திய தேர்வு குழுவினர் இனிமேல் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து முழுமையாக பந்து வீசும் வரை இடமில்லை என்று அதிரடியாக நீக்கினார்கள். அந்த நிலைமையில் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடுமாறு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவுறுத்தியும் கேட்காத அவர் ஐபிஎல் தொடரில் 15 கோடிக்கு குஜராத் அணிக்காக அதுவும் கேப்டனாக விளையாடும் வேலைகளில் ஈடுபட்டார்.

Pandya

அதை தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வழக்கமாக களமிறங்கும் மிடில் ஆர்டருக்கு பதில் 3-வது இடத்தில் களமிறங்கிய அவர் பேட்டிங்கில் தனது அணி சரியும் போதெல்லாம் சிறப்பாக பேட்டிங் செய்து தாங்கிப் பிடித்தார். மொத்தம் 15 போட்டிகளில் 487 ரன்கள் எடுத்த அவர் பந்து வீச்சில் 8 விக்கெட்டுகளை எடுத்து ஒரு ஆல்-ரவுண்டராக குஜராத் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் 34 ரன்கள் எடுத்து ஆல்-ரவுண்டராக ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

- Advertisement -

தடுமாறும் பாண்டியா:
இப்படி சிறப்பான கேப்டன்ஷிப், சாம்பியன் பட்டம் போன்ற அம்சங்களால் சமீப காலங்களில் பந்து வீசாமல் இருந்து வந்த அவர் தற்போது எவ்வித கேள்வியுமின்றி நேரடியாக இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார். ஆனால் இன்னும் கூட அவர் முழுமையாக பந்து வீசவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. ஆம் இந்த ஐபிஎல் தொடரில் பந்து வீசத் தொடங்கிய அவர் 140 கி.மீ வேகத்தில் பழைய பாண்டியாவாக பந்து வீச ஆரம்பித்தார். இருப்பினும் அதனால் வலியை உணர்ந்த அவர் அனைத்துப் போட்டிகளிலும் முழுமையான 4 ஓவர்களை வீசுவதை நிறுத்திக்கொண்டு முகமது சமி போன்ற முக்கிய பவுலர்கள் தடுமாறினால் அதை ஈடு செய்யும் வகையில் மட்டும் தேவையான நேரத்தில் வீசினார்.

pandya 2

சொல்லப்போனால் அதனால் மீண்டும் காயமடைந்த அவர் இடையே ஒரு போட்டியில் பங்கேற்கவில்லை. மேலும் களமிறங்கிய 15 போட்டிகளில் 10 இன்னிங்சில் மட்டுமே அவர் பந்து வீசினார். அதுவும் முழுமையான 4 ஓவர்களை வீசவில்லை.

- Advertisement -

ஆனால் முக்கியமான பைனலில் 4 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை எடுத்து அவை அனைத்தையும் மறைப்பது போல் அசத்தலாக செயல்பட்டார். இதனால் இந்திய அணிக்கு மீண்டும் ஹர்டிக் பாண்டியா திரும்பியிருந்தாலும் அவர் முழுமையாக 4 ஓவர்கள் வீசுவாரா என்பது சந்தேகமாக உள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Azharuddin

அசாருதீன் கேள்வி:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்படும் திறமை அவரிடம் உள்ளது. ஆனால் காயங்கள் காரணமாக அவரால் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. தற்போது 4 ஓவர்கள் வீசிய அவர் மீண்டும் வந்துள்ளார். இருப்பினும் அவர் எந்த அளவுக்கு முழுமையாக பந்து வீசுவார் என்று நமக்கு தெரியாது. ஆனாலும் அவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால் முழுமையாக அவர் பந்துவீச வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.

இதையும் படிங்க : டி.என்.பி.எல் 2022 : ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி – போட்டியை எந்த சேனலில் பார்க்கலாம்?

அவர் ஐபிஎல் பைனலில் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் எடுத்து 34 ரன்கள் குவித்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அவரிடம் நல்ல திறமை உள்ளது. அதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதே நம்முடைய ஆசையாகும்” என்று கூறினார்.

Advertisement