டி.என்.பி.எல் 2022 : ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி – போட்டியை எந்த சேனலில் பார்க்கலாம்?

TNPL
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று தமிழக வீரர்களுக்காக நடைபெற்று வரும் பிரத்யேக தொடரான டி.என்.பி.எல் இந்த ஆண்டு 6-வது சீசன் ஆக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்களை தலைமையாகக் கொண்டு அணிகள் பிரிக்கப்பட்டு இதில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரானது தமிழக ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டி.என்.பி.எல் தொடரின் மூலம் சிறப்பாக விளையாடிய பல்வேறு வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் இடம்பிடித்ததை நாம் கண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடரானது வருகிற ஜூன் 23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டிற்கான போட்டிகள் நெல்லை, சேலம், கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தாண்டிற்கான முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த முதலாவது போட்டி நெல்லையில் நடைபெறவுள்ளது.

tnpl

இந்நிலையில் இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழக கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி இந்த தொடர் குறித்து அளித்துள்ள பேட்டியில் : இந்த ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக செய்யப்பட்டு முடிவு பெற்றுள்ளன. இம்முறை போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு 100% அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் இந்த ஆண்டு கூடுதல் சுவாரசியத்துடன் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட ஐ.பி.எல் தொடருக்கு நிகராக தமிழக ரசிகர்கள் பார்க்கும் இத்தொடர் நிச்சயம் ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க : என்னது நான் நம்பர் 1 பேட்ஸ்மேனா தினேஷ் கார்த்திக்கின் பாராட்டிற்கு பதிலளித்த – பாபர் அசாம்

இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஐ.பி.எல் தொடரில் கலக்கிய வீரர்களும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement