என்னது நான் நம்பர் 1 பேட்ஸ்மேனா தினேஷ் கார்த்திக்கின் பாராட்டிற்கு பதிலளித்த – பாபர் அசாம்

Azam
- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் தினேஷ் கார்த்திக் அன்மையில் அளித்துள்ள ஒரு பேட்டியில் உலகின் தலை சிறந்த வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் திகழ்வார் என்று கூறியுள்ளார்.

babar azam 1

- Advertisement -

மேலும் இதே பார்மில் அவர் விளையாடும் பட்சத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் நம்பர் ஒன் வீரராக மாறுவார் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள பாபர் அசாம் கூறுகையில் :

சர்வதேச கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ வேண்டும் என்பது அனைவருடைய கனவாகவும் இருக்கும். அந்த வகையில் நானும் மிகச்சிறப்பான பேட்ஸ்மேனாக மாறுவதற்கான உழைப்பை வெளிப்படுத்துகிறேன். கடினமான உழைப்பால் ஒன்று அல்லது இரண்டு கிரிக்கெட்டில் நம்பர் 1 ஆக இருக்கலாம். ஆனால் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன்னாக இருப்பது மிகவும் சவாலான ஒன்று.

azam

அதோடு இப்படி சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக நாம் சிறப்பாக விளையாட பிட்னஸ் மிகவும் அவசியம். அந்த வகையில் நான் கூடுதல் பிட்னஸ்சுடன் இருக்க தற்போது தயாராகி வருகிறேன். பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து கொண்டே இருப்பதால் அதற்கும் தயாராகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தற்போதுவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறேன். அதே போன்று டெஸ்ட் போட்டியிலும் இனிவரும் காலங்களில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாக பாபர் அசாம் தினேஷ் கார்த்திக்கின் கருத்திற்கு பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பாக வெற்றி பெற சென்னை கழற்றிவிட வேண்டிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement