ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பாக வெற்றி பெற சென்னை கழற்றிவிட வேண்டிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. அந்த அணிக்கு காயத்தால் தீபக் சஹர் விலகியது ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டன்சிப் பொறுப்பை அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்து அவரையும் கெடுத்து பின்னர் அதே பொறுப்பை மீண்டும் வாங்கிக்கொண்டு எம்எஸ் தோனியின் தவறான முடிவும் தோல்விக்கான காரணமாக அமைந்தது.

அதைவிட ருதுராஜ் கைக்வாட் போன்ற பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதல் சீராக ரன்கள் எடுக்க தவறுயதும் பந்துவீச்சில் தீபக் சஹர் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் இதர பவுலர்கள் சிறப்பாக பந்துவீசாமல் ரன்களை வாரி வழங்கியதும் அந்த அணிக்கு பங்கேற்ற 14 போட்டிகளில் 10 தோல்விகளை பரிசளித்து 9-வது இடத்தை பிடிக்க வைத்தது. அதனால் 2020க்கு பின் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அவமானத்தை சந்தித்தது. இந்த தோல்வியில் பாடத்தை படித்துள்ளதால் இந்த குறைகளை சரி செய்து அடுத்த வருடம் கோப்பையை வெல்ல சென்னை தயாராகி வருகிறது. அதற்கு முதலில் இந்த வருடம் சுமாராக செயல்பட்ட வீரர்களை கழற்றி விட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் அது போன்ற 5 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கிறிஸ் ஜோர்டான்: தீபக் சஹர் இல்லாத பொறுப்பை தோளில் சுமக்க வேண்டிய 3.60 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 4 போட்டிகளில் 10.52 என்ற மோசமான எக்கனாமியில் பந்துவீசி வள்ளல் பரம்பரையாக மாறினார்.

குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் ஒரே ஓவரில் 25 ரன்களை வாரி கொடுத்த இவர் வெற்றியையும் பரிசளித்ததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டதால் எவ்வித யோசனையுமின்றி சென்னை நிர்வாகம் கழற்றிவிட வேண்டும்.

- Advertisement -

2. ராபின் உத்தப்பா: கடந்த 2021இல் 3 கோடிக்கு வாங்கப்பட்டு கடைசி நேரத்தில் ரெய்னா காயமடைந்த நிலையில் பைனல் உட்பட நாக் அவுட் போட்டிகளில் அசத்திய ராபின் உத்தப்பா 4 போட்டிகளில் 115 ரன்கள் குவித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதால் இந்த வருடம் 2 கோடிக்கு மீண்டும் வாங்கப்பட்டார்.

ஆனால் இம்முறை ஒரு போட்டியில் சிவம் துபேவுடன் இணைந்து மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 88 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பங்காற்றியது தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சொதப்பினார். தற்போது டேவோன் கான்வே சிறந்த தொடக்க வீரராக தன்னை நிரூபித்துள்ளதால் மொத்தம் 12 போட்டிகளில் 230 ரன்களை 20.91 என்ற சுமாரான சராசரியில் எடுத்த இவரை அடுத்த வருடம் சென்னை நிர்வாகம் கழற்றி விடுவதற்காக அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

3. ஆடம் மில்னே: நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் 1.90 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில் ஒரு போட்டியுடன் காயத்தால் துரதிஷ்டவசமாக விலகினார்.

இருப்பினும் அவருக்கு பதில் முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங் போன்ற இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு நாங்கள் இருக்கிறோம் என்று நிரூபித்தால் அடுத்த வருடம் இவரை மீண்டும் சென்னை வாங்குவதற்கு வாய்ப்புகள் குறைவாகத் தென்படுகிறது.

- Advertisement -

4. அம்பத்தி ராயுடு: கடந்த 2018 முதல் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் இவர் இந்த வருடம் 6.75 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில் 13 போட்டிகளில் 274 ரன்களை 24.91 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்தார்.

அவரின் பேட்டிங் பற்றி அணி நிர்வாகம் கேள்வி எழுப்பியதால் அதிருப்தியடைந்த அவர் ஓய்வு பெறுகிறேன் என்று ட்விட்டரில் அறிவித்து பின்னர் டெலிட் செய்தார். இதனால் அவருக்கும் சென்னை நிர்வாகத்திற்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளதாலும் இந்த வருடம் சுமாராக செயல்பட்டாலும் அடுத்த சீசனில் இவரை அந்த அணி வாங்குவது சந்தேகமே.

5. துஷார் தேஷ்பாண்டே: 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இளம் வீரரான இவருக்கு 2 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் 1 விக்கெட் மட்டுமே எடுத்த அவர் 63 ரன்களை வாரி வழங்கினார்.

அதனால் முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங் போன்ற இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இவரை மீண்டும் சென்னை வாங்குவது கடினமாக பார்க்கப்படுகிறது.

சந்தேக பட்டியல்:
ஷிவம் துபே: கடந்த 2019 முதல் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளில் சுமாராக செயல்பட்டு வந்த இவரை இந்த வருடம் சென்னை 4 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. அதில் 1 போட்டியில் ராபின் உத்தப்பாவுடன் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 95* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்ததை தவிர எஞ்சிய போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டார்.

மொத்தம் 11 போட்டிகளில் 289 ரன்களை 28.90 என்ற சுமாரான சராசரியில் 156.22 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். ஆனாலும் இவரின் இந்த ரன்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட் என அனைத்துமே அவரின் கேரியரில் சென்னைக்கு வந்த இந்த வருடத்தில்தான் உச்சத்தை தொட்டுள்ளது. எனவே இளம் ஆல்-ரவுண்டராக இருக்கும் இவருக்கு அடுத்த வருடம் சென்னை ஒருவேளை வாய்ப்பளிக்கலாம்.

ட்வயன் ப்ராவோ: சென்னைக்காக கடந்த பல வருடங்களாக நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் டுவைன் பிராவோ இம்முறை 4.40 கோடிக்கு மீண்டும் வாங்கப்பட்ட நிலையில் பங்கேற்ற 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை என்ற 8.71 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்து பேட்டிங்கில் 6 இன்னிங்சில் வெறும் 23 ரன்களை மட்டுமே எடுத்தார்.

அவரின் தரத்திற்கு இது குறைவு என்றாலும் கடந்த பல வருடங்களாக சென்னைக்கு வெற்றிகளைத் தேடி கொடுத்து வரும் அவர் மீது அந்த அணி நிர்வாகமும் தோனியும் நிறைய நம்பிக்கை வைத்துள்ளதால் மீண்டும் வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement