140 கோடி இந்தியரில் அப்படி ஒரு வீரர் கிடைக்கல, உலககோப்பை தோல்விகளை தேர்வுக்குழு மீது போடும் முன்னாள் கோச்

india
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடரை வெல்வதற்கு இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா முழுமூச்சுடன் போராட உள்ளது. ஏனெனில் கடந்த 2007இல் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா அதன்பின் 2014இல் இறுதிப்போட்டியிலும் 2016இல் சொந்த மண்ணில் அரையிறுதியிலும் தோற்றது. அதைவிட கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் முதல் முறையாக மண்ணை கவ்விய விராட் கோலி தலைமையிலான இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

- Advertisement -

அதுபோக கடைசியாக கடந்த 2013ல் எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா அதன்பின் 2014, 2015, 2016, 2017, 2019 ஆகிய வருடங்களில் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட போதிலும் நாக்-அவுட் சுற்றில் முக்கிய தருணங்களில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது ரசிகர்களின் நெஞ்சங்களைக் உடைத்தது. எனவே கடந்த 8 வருடங்களாக தொடர்ச்சியாக சந்தித்துவரும் தோல்விகளுக்கு இம்முறை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆல்-ரவுண்டர் பற்றாக்குறை:
முன்னதாக தற்போது ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் என புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை கூட்டணிக்கு முன்பாக விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோரது கூட்டணி கடந்த 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் செயல்பட்டு வந்தது. அவர்களது தலைமையில் சாதாரண இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்ட இந்தியா ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டும் குறிப்பாக நாக்-அவுட் சுற்றில் படு மோசமான தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. 2019 உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பேட்டிங்கில் தடுமாறி வெளியேறிய இந்தியா 2021 டி20 உலக கோப்பையிலும் அதே தவறை செய்து வெளியேறியது.

sachin

அந்த நிலையில் இந்திய அணியில் நல்ல தரமான பகுதிநேர பந்துவீசும் பேட்ஸ்மேன்கள் இல்லாததே 2019 – 2021 வரையிலான காலகட்ட தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆரம்ப காலங்களில் யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் பகுதிநேர பந்துவீச்சாளர்களாக மாறி எதிரணிகளை திணறடித்தார்கள் என்று மீண்டும் தெரிவிக்கும் ரவி சாஸ்திரி அது போன்ற வீரர்கள் இல்லாததே இந்திய அணியின் சமீபகால தடுமாற்றத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தேர்வுக்குழுவை சாடல்:
அதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் அது போன்ற வீரர்களை தேர்வு செய்து கொடுக்குமாறு தேர்வு குழுவிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கும் அவர் கடைசி வரை அது போன்ற வீரர்களை தேர்வுக்குழு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அதுபோன்ற வீரர்களுக்கு பஞ்சமா என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர் இது பற்றி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வர்ணனையாளராக பேசியது பின்வருமாறு.

Raina

“ஒரு காலத்தில் சேவாக், சச்சின், யுவராஜ், ரெய்னா போன்றவர்கள் இருந்தனர். ஆனால் கடந்த 3 – 4 வருடங்களில் உங்களுக்கு யாரும் அப்படி கிடைக்கவில்லை. அதனால் அணியின் மொத்த சமநிலையும் மாறிப்போனது. எனவே தற்போதைய அணியில் அக்சர் பட்டேல், தீபக் ஹூடா போன்றவர்கள் இருப்பது உங்களுக்கு நல்லதாகும். அவர்கள் பேட்டிங் செய்வதுடன் பந்தும் வீசுவார்கள்”

- Advertisement -

“கேப்டன் மற்றும் தேர்வுக்குழுவுக்கு இடையே நல்ல தொடர்பு இருந்தால் மட்டுமே வெற்றிக்கு உதவும். அந்த வகையில் தேர்வு குழுவிடம் நாங்கள் டாப் 6 இடங்களில் பேட்டிங் செய்பவர்களில் யாரேனும் ஒருவர் 4 – 5 ஓவர்கள் பந்துவீசுபவராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். உள்ளூர் கிரிக்கெட்டில் அதை செய்பவரை கண்டறியுமாறு கூறினோம். ஏனெனில் நமது நாட்டில் பேட்டிங் செய்து விட்டு மகிழ்ச்சியுடன் பந்துவீச கூடியவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்”

shastri

“குறிப்பாக சச்சின் தனது பேட்டிங்கை செய்து முடித்து விட்டால் தாமாக முன்வந்து பந்து வீச்சில் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின் என வகை வகையாக பந்துவீசி எதிரணியை திணறடிப்பார். அஜய் ஜடேஜாவும் அது போன்றவர். எனவே உங்களிடம் இருக்கும் 140 கோடி மக்களில் அது போன்ற ஒருவர் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள். இருப்பினும் இந்தியாவில் ஆர்வத்துடன் பந்துவீச எந்த பேட்ஸ்மெனும் இல்லையா? அப்படியானால் அது சாத்தியமற்றதாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு 2011 உலககோப்பை வென்ற பயிற்சியாளர் மீண்டும் நியமனம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

தற்போதைய இந்திய அணியிலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் பந்துவீசும் திறமை பெற்றவர்கள். குறிப்பாக ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தவர். எனவே முக்கிய நேரங்களில் பொறுப்புடன் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி அவர்கள்தான் தாமாக முன்வந்து பந்துவீச வேண்டுமே தவிர அது போன்ற ஒருவரை தேர்வு குழு கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை அதனால் தோற்று விட்டோம் என்று ரவி சாஸ்திரி கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்பதே நிதர்சனம்.

Advertisement