இப்படி நடக்கும்னு தெரியும். ஆனால் – இந்தியாவின் நிலையை முன்கூட்டியே கணித்த கபில் தேவ் தற்போது கூறுவது என்ன?

Kapil Dev Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை சுவைத்த இந்தியா வழக்கம் போல இங்கிலாந்துக்கு எதிராக அழுத்தமான நாக் அவுட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதிலும் 169 ரன்களை துரத்திய இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு போராடாமல் இந்தியா தோற்றது தான் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Alex Hales 1

- Advertisement -

கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா அதன் பின் களமிறங்கிய பெரும்பாலான உலக கோப்பையில் இதே போல லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விடுகிறது. ஆனால் 100% சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை சுவைக்கக்கூடிய அழுத்தமான நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பும் இந்தியா உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தும் வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது.

சோக்கர்ஸ் இந்தியா:

பொதுவாக உலக கோப்பையில் இது போன்ற முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறுவதை தென்னாபிரிக்கா வழக்கமாக வைத்திருப்பதால் அந்த அணியை சோக்கர்ஸ் என்று வல்லுனர்கள் அழைப்பது வழக்கமாகும். ஆனால் அந்த அணியை மிஞ்சும் வகையில் சமீப காலங்களில் அழுத்தமான நாக் அவுட் சுற்றில் சொதப்பி இந்தியா வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது. அதனால் சமீப காலங்களில் இந்தியாவை நாக் அவுட் போட்டிகளின் சோக்கர் என்று இந்திய ரசிகர்களே அழைக்க துவங்கியுள்ளார்கள்.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

அந்த வரிசையில் இப்போது மீண்டும் ஒருமுறை நாக் அவுட் போட்டியில் ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா சோக்கர்ஸ் என்று அழைப்பதற்கு தகுதியான அணி என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனையுடன் கூறியுள்ளார். ஆனால் ஒரு சில போட்டிகளுக்காக இந்தியாவை மட்டமான அணி என்று குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆம், நாம் அவர்களை சோக்கர்ஸ் என்று அழைக்கலாம். ஏனெனில் அவர்கள் வெற்றியின் மிக அருகில் வந்தாலும் இறுதியில் சோக் செய்து வெளியேறுகிறார்கள். ஆனால் அதற்காக அதிக தீவிரமாக விமர்சிக்காதீர்கள். இம்முறையும் இந்தியா மோசமான கிரிக்கெட்டை விளையாடியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வெறும் ஒரு போட்டியை வைத்து நாம் ஒரு தரமான அணியை அதிகமாக விமர்சிக்க முடியாது” என்று கூறினார்.

kapildev

முன்னதாக இந்த உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக களமிறங்கிய இந்தியா நிச்சயமாக கோப்பையை வெல்லும் என்று ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் என அத்தனை முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் கணித்தார்கள். ஆனால் என்னதான் உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்டிருந்தாலும் தம்மை பொறுத்த வரை இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு வெறும் 30 – 35% மட்டுமே வாய்ப்புள்ளதாக ஆரம்பத்திலேயே கபில் தேவ் மட்டுமே தைரியமான உண்மையான கணிப்பை வெளியிட்டார்.

இதையும் படிங்க : வேலை போயிடுமோனு அவங்க ரொம்ப பயப்படுறாங்க. இந்திய வல்லுநர்களை – சாடிய மைக்கல் வாகன்

தற்போது அவர் கூறியுள்ளது போலவே நடந்துள்ளது உண்மையாகவே நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. மேலும் ஒரே ஒரு நாக் அவுட் போட்டியை வைத்து இந்திய அணியையும் அதில் உள்ள வீரர்களையும் குறைத்து மதிப்பிட்டு மோசமாக விமர்சிக்க வேண்டாம் என்றும் ரசிகர்களை கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக இந்த உலகக் கோப்பையில் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் அவர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கைகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement