வேலை போயிடுமோனு அவங்க ரொம்ப பயப்படுறாங்க. இந்திய வல்லுநர்களை – சாடிய மைக்கல் வாகன்

Michael-Vaughan and IND Team
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணியானது நேற்று அடிலெயிடு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்து 168 ரன்களை குவித்தது. பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் 170 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

- Advertisement -

இந்த டி20 உலகக் கோப்பை தொடங்கும் முன்னர் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்றும் இந்திய அணியில் எந்த ஒரு குறையும் இல்லை என்றும் இந்தியாவை சேர்ந்த விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலம் முன்வைத்து வந்தனர். அதே வேளையில் இந்திய அணியை தொடர்ச்சியாக வெளிநாட்டு விமர்சகர்கள் அவர்களது குறையை சுட்டிக் காண்பிக்கும் போதெல்லாம் சமூக வலைதளத்தில் இந்திய வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் அவர்களை கடுமையாக சாடினர்.

இப்படி இந்த தொடர் முழுவதுமே பரபரப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் தற்போது இந்திய அணி தோல்வியை சந்தித்த வேளையில் இந்திய கிரிக்கெட் வல்லுநர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என யாரும் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன் இந்திய அணியை தற்போது விமர்சித்தால் அவர்களது வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில் விமர்சகர்கள் இந்திய அணி குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Arshdeep Singh 1

இது குறித்து அவர் கூறுகையில் : தற்போது இந்திய அணியை யாருமே விமர்சிக்க விரும்பவில்லை. ஏனெனில் இந்திய முன்னாள் வீரர்கள் இந்திய அணியை விமர்சித்தால் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு சமூக வலைதளத்தில் கிளம்பும். அதோடு அவர்களது வேலையையும் இழந்து விடுவார்கள் என்ற பயத்தினால் தற்போது இந்திய அணியின் தோல்வி குறித்து யாரும் பேச முன்வருவதில்லை.

- Advertisement -

ஆனால் தற்போது இந்திய அணி பெற்ற இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் குறைகளை பற்றி நேரடியாக பேச வேண்டிய நேரம். இது ஒட்டுமொத்தமாக அணியின் சரிவு இந்த தொடரில் வெளிப்பட்டுள்ளதால் இந்த குறைகளை சுட்டிக் காட்டி அவர்கள் நேர்த்தியான முறையில் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க : இந்தியாவை ஓட விட்டதற்கு ஐபிஎல் தான் காரணம் – அதிரடி வெற்றியின் ரகசியம் பற்றி கேப்டன் பட்லர் ஓப்பனாக பேசியது என்ன

ஆனால் இந்த நேரத்தில் இந்திய அணியை விமர்சித்தாலோ அல்லது குறைகளை சுட்டி காட்டினாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பும் என்பதனால் விமர்சகர்கள் அதனை செய்ய பயப்படுகிறார்கள் என மைக்கேல் வாகன் சாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement