இந்தியாவை ஓட விட்டதற்கு ஐபிஎல் தான் காரணம் – அதிரடி வெற்றியின் ரகசியம் பற்றி கேப்டன் பட்லர் ஓப்பனாக பேசியது என்ன

Buttler
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. அப்போட்டியில் ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்டாலும் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்த பாகிஸ்தானும் ஆரம்ப முதலே தடுமாறாமல் வெற்றி நடை போட்டு அரையிறுதியில் வலுவான இந்தியாவை அடித்து துவைத்த வெற்றி கண்ட இங்கிலாந்தும் மோதுகின்றன.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

குறிப்பாக நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2வது அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா 27, ராகுல் 5, சூர்யா குமார் யாதவ் 14 என முக்கிய வீரர்களை அபாரமாக பந்து வீசி மடக்கி பிடித்த இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் விராட் கோலி 50 (40) ரன்களும் ஹர்டிக் பாண்டியா 63 (33) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் போராடி இந்தியா நிர்ணயித்த 169 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய ஓப்பனிங் ஜோடியே கடைசி வரை அவுட்டாகாமல் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 170/0 ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

ஐபிஎல் தான் காரணம்:

அதில் ஜோஸ் பட்லர் 80* (49) ரன்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 86* (47) ரன்களும் விளாசி 15 வருடங்களுக்கு பின் 2வது டி20 உலக கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவை அடித்து நொறுக்கி இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக உடைத்தார்கள். அதிலும் இந்திய பவுலர்களை லோக்கல் பவுலர்களை போல முதல் பந்திலிருந்தே பந்தாடிய அவர்களது அதிரடியான அணுகு முறை பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் செமி பைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கி ஓட விடுவதற்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவமே பயன்பட்டதாக போட்டி முடிந்த பின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.

Jos Buttler vs RCB

அத்துடன் பைனலில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதை எப்படியாவது தடுப்போம் என்று ஆரம்பத்தில் சொன்னதை நிறைவேற்றி காட்டிய அவர் இது பற்றி மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “நிறைய பேர் இந்தியா – பாகிஸ்தான் மோதும் பைனலுக்காக காத்திருந்தார்கள். ஆனால் அந்த இடத்திற்கு நாங்கள் செல்ல தீவிரமாக முயற்சித்தோம். குறிப்பாக அவர்கள் மோதுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற வகையில் நாங்கள் வேண்டுமென்றே விளையாடினோம். ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் அவர்கள் இருவரும் கடுமையாக மோதி கொண்டார்கள். அதனால் அப்போட்டிக்காக நிறைய பேர் காத்திருந்தார்கள்”

- Advertisement -

“ஆனால் அவர்களை அடுத்த உலகக் கோப்பை வரை காத்திருக்க வைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடிய ஏகப்பட்ட அனுபவம் எங்களது அணியில் உள்ளது. இந்த போட்டியில் நிலவிய அழுத்தமான சூழ்நிலைகளை நாங்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் எதிர்கொண்டதால் இன்றைய நாளில் நிலவிய அழுத்தம் எங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் விளையாடும் போது நிறைய ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு கொடுப்பது போல் இங்கேயும் ஆதரவு கொடுப்பார்கள் என்பதை புரிந்து நாங்கள் விளையாடினோம்”

Buttler

“ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் நிறைந்த வீரர்கள் எங்களது அணியில் இருப்பதை விட வேறு எந்த சாதகமும் எங்களுக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்” என கூறினார். அதாவது மொய்ன் அலி முதல் சாம் கரண் வரை கிட்டத்தட்ட அனைத்து இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போன்ற அழுத்தம் வாய்ந்த தொடரில் விளையாடிய அனுபவத்தை பெற்றிருப்பதால் இந்த அழுத்தமான போட்டியில் இந்தியாவை எளிதாக தோற்கடிக்க முடிந்ததாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பையை வென்ற அனுபவம் தமக்கு உதவியதாக அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் இந்தியாவின் பொருளை வைத்து இந்தியாவை சாய்த்த கதை இந்த செமி பைனலில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement