டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கப்போறதே அவங்கதான் – இங்கிலாந்து வெளிப்படையான அறிவிப்பு

IND vs ENG Jos Buttler
- Advertisement -

வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதிகட்டமாக தயாராகி வருகின்றன. இதில் உலகம் முழுவதிலுமிருந்து டாப் 16 அணிகள் பங்கேற்றாலும் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா, உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா மற்றும் அதிரடிப்படையாக திகழும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக மைக்கேல் பெவன் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். இதில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியாவும் தரமான வீரர்களை கொண்ட இந்தியாவுக்கும் அதிக வாய்ப்புள்ளதாக நிறைய கருத்துக்கள் காணப்படுகின்றன.

Reece Toply England

- Advertisement -

அதே சமயம் 2019 உலக கோப்பையை வென்ற இயன் மோர்கன் ஓய்வுக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் பட்லர் தலைமையில் அதிரடி வீரர்களைக் கொண்ட இங்கிலாந்தும் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பால் காலிங்வுட் தலைமையில் கெவின் பீட்டர்சன் போன்ற தரமான வீரர்களுடன் பைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற அந்த அணி அதன்பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

கோப்பை எங்களுக்கில்லை:
அந்த கதைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைத்து ஜோஸ் பட்லர் தலைமையிலான அணி கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். இருப்பினும் அந்த அணிக்கு முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அதிரடி தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் காயத்தால் வெளியேறியது ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அலெஸ் ஹேல்ஸ் வருகையுடன் மொய்ன் அலி, பிலிப் சால்ட், ஹரி ப்ரூக், டேவிட் மாலன், பேன் ஸ்டோக்ஸ், மார்க் வுட் போன்ற தேவையான உலகத் தரமான வீரர்களுடன் சமீபத்தில் 4 – 3 (7) என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த இங்கிலாந்து அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது.

Eng

இந்த தொடரில் வென்று உலக கோப்பையையும் வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தங்களது அணி கோப்பையை வெல்லப் போவதில்லை என்று கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக பேசியுள்ளார். மாறாக வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் இத்தொடரில் அதிரடியாக விளையாடி முடிந்தளவுக்கு கோப்பையை வெல்ல போராடுவோம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமபத்திய பேட்டியில் பேசியது வருமாறு.

- Advertisement -

“நான் எங்களை கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கவில்லை. ஆனால் எதிரணி எதுவாக இருந்தாலும் அதை பந்தாடும் ஆபத்தான அணியாக எங்களை நான் பார்க்கிறேன். எங்களது பேட்டிங் வரிசையை நீங்கள் பார்க்கும் போது அதில் திறமையான மேட்ச் வின்னர்கள் உள்ளனர். அதனால் உலகக்கோப்பையில் களமிறங்கி எங்களது திறமையை வெளிப்படுத்தி மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளோம். நானும் 100% உடல் தகுதியை பெற்றுள்ளேன். பாகிஸ்தானில் லேசான காயத்தை சந்தித்தாலும் தற்போது குணமடைந்துள்ளேன்”

Buttler

“உலகக்கோப்பை விரைவில் நடைபெற உள்ளதால் நான் ரிஸ்க் எடுக்காமல் அந்த தொடரில் விளையாடவில்லை. 2019 உலகக் கோப்பையில் நாங்கள் அனைவரும் ஒரே பாதையில் பயணித்து மிகப்பெரிய வெற்றியை வென்றதாக உணர்ந்தோம் ஆனால் தற்போதைய நிலைமை மாறுபட்டது. இந்த உலக கோப்பையில் நான் கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய கௌரவமாகும். இருப்பினும் இங்கு எனக்கு நானே அழுத்தத்தை போட்டுக்கொண்டு விளையாடாமல் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் விளையாட முயற்சிக்க உள்ளேன்”

- Advertisement -

“இத்தொடர் நடைபெறும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் அற்புதமான இடமாகும். இங்கு எங்களது அணி வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். அதே சமயம் சொந்த மண்ணில் இத்தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : கேப்டன் தோனி மாதிரி பாகிஸ்தானை யாராலும் ஆள முடியாது – பாக் ஜாம்பவான் வெளிப்படை பாராட்டு

அதாவது ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லப் போகிறோம் என்று வாயை விடாமல் மகிழ்ச்சியுடன் விளையாடி முடிந்தளவுக்கு கோப்பையை வெல்ல பாடுபடுவோம் என்று ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.

Advertisement