நாங்கள் பெட்ரோல் போட்டு ஓடும் கார்கள் கிடையாது – கிரிக்கெட் வாரியத்துக்கு பென் ஸ்டோக்ஸ் சவுக்கடி

Ben Stokes ODI
- Advertisement -

இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 31 வயதிலேயே அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த 2011 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இங்கிலாந்துக்காக 3 வகையான அணியிலும் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வந்த அவர் 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் 84 ரன்கள் குவித்து முதல் முறையாக உலககோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக போற்றப்பட்டு வந்த அவர் சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0, 21, 27 என சுமாராக செயல்பட்டதால் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Ben Stokes

- Advertisement -

நெருக்கமான கால அட்டவணைகளுக்கு மத்தியில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடுவதற்கு தனது உடல் ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்த அவர் அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத தவறுவதுடன் இதர வீரர்களின் இடத்தை கெடுப்பதாக உணர்வதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வழக்கம் போல 100% பங்களிப்புடன் விளையாட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாரமான பணிச்சுமை:
கடந்த 2013 முதல் 3 வகையான இங்கிலாந்து அணியிலும் ஐபிஎல் போன்ற அனைத்து டி20 தொடர்களிலும் விளையாடிய அவர் பணிச்சுமை காரணமாக கடந்த வருடம் சில மாதங்கள் தற்காலிகமான பிரேக் எடுத்தார். குறிப்பாக 2021, 2022 ஆகிய ஐபிஎல் தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை. அந்த நிலைமையில் மீண்டும் அனைத்து வகையான கிரிக்கெட்டில் விளையாட துவங்கினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் போது உடலிலும் மனதிலும் களைப்பு ஏற்பட்டு 100% பங்களிப்பை வழங்க முடியவில்லை என்று உணர்ந்த காரணத்தால் இந்த வெளிப்படையான முடிவை எடுத்துள்ளது அனைவரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Ben Stokes

நவீன கிரிக்கெட்டில் 3 வகையான போட்டிகளையும் சேர்த்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் பிரீமியர் லீக் தொடர்கள் இடைவிடாது நடைபெறுவதால் சமீப காலங்களில் பணிச்சுமை என்பது கிரிக்கெட் வீரர்களிடையே மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்க தொடங்கியுள்ளது. விராட் கோலி போன்ற வீரர்களின் ஆட்டத்தில் சோடை தெரிவதற்கும் அதுவே ஒரு காரணமாக அமைகிறது. அதனாலேயே ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இடையிடையே ஓய்வெடுத்து முடிந்த அளவுக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட முயற்சிக்கிறார்கள்.

- Advertisement -

கார்கள் கிடையாது:
ஆனால் அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் வீரர்கள் எரிபொருள் தீர்ந்தால் மீண்டும் நிரப்பிக் கொண்டு தொடர்ச்சியாக பயணம் செய்யும் அளவுக்கு கார்களை போன்ற மெஷின்கள் கிடையாது என்று நவீன கால கிரிக்கெட் அட்டவணைகளையும் அதை நிர்வகிக்கும் கிரிக்கெட் வாரியங்களையும் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி பிரபல பிபிசி இணையதளத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எரிபொருள் தீர்ந்தால் உடனடியாக பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பிக் கொண்டு மீண்டும் அங்கு செல்வவதற்கு நாங்கள் கார்கள் கிடையாது. நாங்கள் டெஸ்ட் தொடரில் விளையாடிய பின்பு உடனடியாக ஒருநாள் தொடரில் விளையாடி மீண்டும் விளையாட வேண்டியுள்ளது வேடிக்கையானதாக உள்ளது” என்று கூறினார்.

stokes

அவர் கூறுவது போல நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விட்டு உடனடியாக இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து அதன்பின் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றது. ஜூலை 17இல் நிறைவு பெற்ற அந்த சுற்றுப்பயணத்திற்கு அடுத்தபடியாக கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் ஜூலை 19-ஆம் தேதியான நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து விளையாட துவங்கியுள்ளது. இதை கடுமையாக விமர்சித்துள்ள பென் ஸ்டோக்ஸ் மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போதெல்லாம் வீரர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதிகப்படியான போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளதாக உணர்கிறேன். இது முன்பை விட கடினமாக உள்ளது. தொடர்ச்சியாக அதை நான் செய்ததை திரும்பிப் பார்க்கும்போது அதிகப்படியானதாக நினைக்கவில்லை. ஆனால் முடிந்த அளவுக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட நினைக்கும் நீங்கள் சோர்வாகவும், வலியாகவும், உணரும்போது அந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்ற உணர்வைக் கொடுக்கிறது”

இதையும் படிங்க : கேப்டனாக கலக்கும் புஜாரா, காயத்திலிருந்து குணமடைந்து விக்கெட்களை அள்ளும் தமிழக வீரர் – முழுவிவரம்

“அதிகப்படியான போட்டிகள் வருவது விளையாட்டுக்கு நல்லது. ஆனால் அது தரமாக இருப்பது அவசியமாகும். அதற்காக உங்களது தரமான வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாட விரும்புவீர்கள். இருப்பினும் அது சாத்தியமானது கிடையாது. இது எனக்கு மட்டுமல்ல உலக அளவில் தற்போது நிறைய வீரர்கள் புத்துணர்ச்சி தேவைப்படுகிறது என்று உணர்வதால் குறிப்பிட்ட சில தொடர்களில் ஓய்வெடுக்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisement