வீடியோ : பேட்டிங்கில் சொதப்பி விட்டு ரிஷப் பண்ட்டை முறைத்த விராட் கோலி – கடைசி வாய்ப்பையும் தவற விட்டதால் ரசிகர்கள் அதிருப்தி

Virat Kohli Rishabh Pant
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த நிலையில் டிசம்பர் 22ஆம் தேதியன்று டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் அனலான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு சுருண்டது. சாண்டோ 14, ஜாகிர் ஹசன் 15, கேப்டன் சாகிப் அல் ஹசன் 16, முஷ்பிகர் ரஹீம் 16, லிட்டன் தாஸ் 25, மெஹதி ஹசன் 15 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ராகுல் ஆரம்பத்திலேயே 10 ரன்களில் அவுட்டான நிலையில் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 20 ரன்களில் நடையை கட்டினார். அதனால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீனியர்கள் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

- Advertisement -

முறைத்த கோலி:
அதனால் 94/4 என தடுமாறிய இந்தியாவை அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மீட்டெடுக்கும் வேலையை தொடங்கினார்கள். அதில் ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் சற்று பொறுமையாக விளையாடி நிலையில் மறுபுறம் தமக்கே உரித்தான பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாட துவங்கிய ரிஷப் பண்ட் வங்கதேச பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை முன்னிலைப் பெறச் செய்து அசத்தினார்கள்.

அதில் அதிரடியாக செயல்பட்ட ரிசப் பண்ட் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 93 (104) ரன்களில் அவுட்டாகி சதத்தை நழுவ விட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களில் அவுட்டானார். அவர்களது பொறுப்பான மீண்டெழுந்த இந்தியா 50 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உணவு இடைவேளைக்கு முன்பாக மெஹதி ஹசன் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் வேகமாக சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அதற்கு எதிர்ப்புறமிருந்த ரிஷப் பண்ட் முதலில் ஓகே சொன்னாலும் பின்னர் பின் வாங்கியதால் பாதி தூரம் ஓடிவந்த விராட் கோலி மீண்டும் டைவ் அடித்து தனது விக்கெட்டை காப்பாற்றினார்.

- Advertisement -

அப்போது எழுந்திருக்காமலேயே ரிஷப் பண்ட்டை முறைத்துப் பார்த்த அவர் 2014இல் மிட்சேல் ஜான்சன் போன்ற எதிரணி வீரர்களை எப்படி முறைப்பாரோ அதே பழைய விராட் கோலியாக முறைத்துப் பார்த்தார். அதனால் ரிஷப் பண்ட் சற்று பயந்த நிலையில் அவருடன் பேசி விட்டு மதிய உணவு சாப்பிட்டு தொடர்ந்து பேட்டிங்கை தொடர்ந்த விராட் கோலி வழக்கம் போல 3 பவுண்டரியுடன் 24 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வீரர்கள் பேசும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் அதை சமீபத்திய ஆசிய கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து தூள் தூளாக்கினார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் அபாரமாக செயல்பட்ட அவர் நடைபெற்று முடிந்த வங்கதேச தொடரில் 1214 நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதமடித்தார்.

இதையும் படிங்க: இனிமேல் சொதப்புங்க அப்போதான் சான்ஸ் தருவாங்க, சிறப்பாக செயல்பட்ட வீரரை நீக்கிய – இந்திய அணியை விளாசிய ஹர்பஜன்

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 2019க்குப்பின் இன்னும் சதமடிக்காமல் இருந்து வரும் மோசமான கதைக்கு இந்த வருடத்தில் இந்தியா பங்கேற்கும் இந்த கடைசி போட்டியில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் மீண்டும் அதைத் தவற விட்டுள்ளது நிறைய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் பொதுவாகவே 2வது இன்னிங்ஸில் சதமடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

Advertisement