இனிமேல் சொதப்புங்க அப்போதான் சான்ஸ் தருவாங்க, சிறப்பாக செயல்பட்ட வீரரை நீக்கிய – இந்திய அணியை விளாசிய ஹர்பஜன்

Harbhajan
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டிசம்பர் 22ஆம் தேதியன்று தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் களமிறங்கி விளையாடி வருகிறது. அப்போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மாவுக்கு பதில் தொடர்ந்து கேப்டன்ஷிப் செய்து வரும் கேஎல் ராகுல் 12 வருடங்கள் கழித்து போராடி கம்பேக் கொடுத்துள்ள ஜெயதேவ் உனட்கட் விளையாடுவதாக அறிவித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Unadkat-and-Kuldeep

- Advertisement -

ஆனால் அதற்காக கடந்த போட்டியில் 8 விக்கெட்டுகளும் 40 ரன்களும் குவித்து பெரிய வெற்றியை சுவைக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில் 2019 வாக்கில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் அஷ்வினை பின்னுக்குத் தள்ளி முதன்மை சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்தார். ஆனால் 2019க்குப்பின் தொடர்ச்சியான வாய்ப்புகளை இழந்த அவர் ஐபிஎல் தொடரில் பார்மை இழந்து சுமாராக செயல்பட்டதால் இந்திய அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் மனம் தளராமல் போராடி வந்த அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்று மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக 22 மாதங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்ற அவர் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று அற்புதமான கம்பேக் கொடுத்தார். ஆனால் உலகிலேயே முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றும் அடுத்த போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்ட கொடுமை இந்தியாவில் தான் நடக்கும் என்பதை போல் பரிதாப நிலையை சந்தித்த அவருக்கு ஆதரவாக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்து வருகிறார்கள்.

Kuldeep Yadav Virat Kohli

அசத்தாதிங்க சொதப்புங்க:
அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இனிமேல் நீங்கள் 5 விக்கெட்டுகளை எடுக்காதீர்கள் அப்போது தான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று குல்தீப் யாதவுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். அதாவது சமீப காலங்களில் சொதப்பலாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது போல் நீங்களும் சொதப்புங்கள் என்று வேதனையுடன் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போதிலிருந்து குல்தீப் 5 விக்கெட் ஹால் எடுப்பதை நிறுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி செய்தால் தான் அவருக்கு 2 தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம். இப்போட்டிக்கு முன்பாக கடைசியாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கடினமான சூழ்நிலைகளில் 5 விக்கெட் ஹால் (5/99) எடுத்திருந்தார். அப்போது அவர் தான் வெளிநாடுகளில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராகவும் போற்றப்பட்டார்”

Harbhajan

“அதன் பின் அவர் அடுத்த டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு 2 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போதும் அவர் மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நான் எந்த வீரரின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டும் கடந்து 5 வருடங்களாக சிலர் தொடர் வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். ஆனால் குல்தீப் விஷயத்தில் அது வெறும் 5 நாட்களாக மட்டுமுள்ளது. அந்த வகையில் ஒருவர் 8 விக்கெட்டுகளை எடுத்த பின் அணியிலிருந்து நீக்கப்பட்டால் எப்படி அவர் பாதுகாப்பாக உணர்வார்”

இதையும் படிங்க: அதே தவறை மீண்டும் செய்துள்ள நீங்க என்னைக்குமே கப் ஜெயிக்க மாட்டீங்க – தனது முன்னாள் ஐபிஎல் அணியை விளாசிய கிறிஸ் கெயில்

“எப்படி அவரால் பயமின்றி எதிரணியை அட்டாக் செய்து விளையாட முடியும். இந்த தருணத்தில் அணி நிர்வாகமே அவருக்கு பயத்தை ஏற்படுத்தும் வேலையை செய்துள்ளது. மொத்தத்தில் தலைக்கு மீது கத்தி தொங்கினால் யாருமே சிறப்பாக செயல்பட மாட்டார்கள். இந்த சமயத்தில் குல்தீப் யாதவ் இதற்காக தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதே என்னுடைய விருப்பமாகும். ஏனெனில் அவர் அடுத்த 8 முதல் 10 வருடங்களுக்கு இந்திய அணியில் விளையாடும் திறமை கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement