வீடியோ : சதமடித்த பின் மங்காத்தா தல அஜித் ஸ்டைலில் தமக்கு தாமே வெறியேற்றும் அந்த வார்த்தைகளை பேசிய கிங் கோலி

Virat Kohli
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தக்காவில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அந்த நிலையில் டிசம்பர் 10ஆம் தேதியன்று சட்டக்கிரோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 409/8 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

அதிகபட்சமாக 2வது விக்கெட்டுக்கு 290 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிசான் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த வாய்ப்பில் பொன்னாக செயல்பட்டு 24 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 210 (131) ரன்கள் விளாசினார். அவருடன் தனது பங்கிற்கு அபாரமாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 11 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 113 (91) ரன்கள் விளாசினார். அதைத் தொடர்ந்து 410 ரன்களை துரத்திய வங்கதேசம் ஆரம்ப முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 34 ஓவரில் 182 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

மங்காத்தா கிங் கோலி:
அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று புதிய சாதனையும் படைத்தது. இப்போட்டியில் இரட்டை சதமடித்து வெறித்தனமாக கொண்டாடிய இசான் கிசான் ஆட்டநாயகன் விருது வென்று நிறைய பாராட்டுகளை பெற்ற நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய சதத்தை பொறுமையான சிரித்த முகத்துடன் கொண்டாடினார்.

ஒரு காலத்தில் வெறித்தனமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்த அவர் வயது மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் பக்குவமாக கொண்டாடுகிறார். அதிலும் குறிப்பாக கடந்த 2019க்குப்பின் சதடிக்கவில்லை என்பதற்காக இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று பேசும் அளவுக்கு உலக அளவில் தினந்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கிய போது வெறித்தனமாக கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகம் நிறைய புன்னகையுடன் ஜாலியாக கொண்டாடினார்.

- Advertisement -

குறிப்பாக 1021 நாட்கள் கழித்து சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்து பார்முக்கு திரும்பிய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டார். அந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த 2019 ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தன்னுடைய 43வது சதத்தை அடித்திருந்த விராட் கோலி கடந்த 3 வருடங்களாக 44வது சதமடிக்க முடியாமல் தவித்து வந்தார். அதற்கு இப்போட்டியில் 1214 நாட்கள் கழித்து சதமடித்து அந்த மோசமான கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர் சதமடித்து தனது ஹெல்மெட்டை கழற்றி புன்னகையுடன் கொண்டாடும் போது சில வெறியேற்றும் வார்த்தைகளையும் தனக்குத்தானே பேசிக் கொண்டார்.

அதாவது “3 (பிரபல ஆங்கில கெட்ட வார்த்தை) வருடங்கள் பாஸ்” என்று தமக்குத் தாமே சூடேற்றம் வார்த்தைகளை அவர் பேசியது ஸ்லோ மோஷனில் தெளிவாக தெரிந்தது. அதை பார்க்கும் போது தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்கள் கொண்டாடும் அஜித் குமார் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் அவர் பேசும் “திஸ் இஸ் மை கேம்” என்ற வசனம் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது.

இதையும் படிங்க: வீடியோ : அதனால் தான் அவர் லெஜெண்ட், விராட் கோலியின் பொன்னான மனதை பாராட்டும் ரசிகர்கள் – விவரம் இதோ

அதனால் அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இந்த சதத்தையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதங்களை அடித்துள்ள விராட் கோலி அதிக சதங்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். இதனால் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையையும் அவர் முறியடிப்பாரா என்பதே விராட் கோலி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement