வீடியோ : ஹாட்ரிக் சிக்ஸர்கள், 2023 உ.கோ ஷ்ரேயாஸ், ஸ்கை இடத்துக்கு குறி – ப்ரெண்டன் மெக்கல்லம் சாதனையை உடைத்த விஜய் சங்கர்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதியன்று மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரிதிமான் சஹா 17 (17) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் 2வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்த போது 5 பவுண்டரியுடன் 39 (31) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய அபினவ் மனோகர் 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த விஜய் சங்கருடன் கைகோர்த்து சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (38) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் லாக்கி பெர்குசன் வீசிய 19வது ஓவரில் நோ-பால் 5, 2, 6, 4, 6 என 24 ரன்களை தெறிக்க விட்ட விஜய் சங்கர் சர்துல் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் 0, 6, 6, 6 என 18 ரன்களை விளாசினார்.

- Advertisement -

உலககோப்பை வாய்ப்பு:
அதனால் எதிர்ப்புறம் 2* (3) ரன்களுடன் இருந்த டேவிட் மில்லரை விட 4 பவுண்டரி 5 சிக்சருடன் 63* (24) ரன்களை 262.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் குஜராத் 204/4 ரன்கள் சேர்த்து அசத்தியது. குறிப்பாக 21 பந்துகளில் அரை சதமடித்த அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

அதை விட 19, 20 ஆகிய ஓவர்களில் மொத்தமாக 41 ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் கடைசி 2 ஓவரில் அதிக ரன்கள் எடுத்த 3வது வீரர் என்ற ப்ரெண்டன் மெக்கல்லம் சாதனையை உடைத்தார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி : 44 (10) குஜராத்துக்கு எதிராக, 2016
1. ரவீந்திர ஜடேஜா : 44 (12) பெங்களூருக்கு எதிராக, 2021
2. கேஎல் ராகுல் : 43 (9), பெங்களூருக்கு எதிராக, 2020
3. விஜய் சங்கர் : 41 (11), கொல்கத்தாவுக்கு எதிராக, 2023*
3. ரிங்கு சிங் : 41 (10), குஜராத்க்கு எதிராக, 2023*
4. ப்ரெண்டன் மெக்கல்லம் : 39 (11), பெங்களூருக்கு எதிராக, 2008

- Advertisement -

முன்னதாக கடந்த 2019 உலக கோப்பையில் 4வது இடத்தில் விளையாட தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அம்பத்தி ராயுடு காத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த இடத்தில் விளையாடுபவர் பந்து வீசுபவராக இருக்க வேண்டும் என்று விரும்பிய தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி நிர்வாகம் குறைந்த அனுபவம் மட்டுமே கொண்ட விஜய் சங்கரை தேர்வு செய்தது. அதில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட்டுகளை எடுத்தது தவிர பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்ட அவர் பாதியில் காயமடைந்து வெளியேறினார்.

அதன் பின் அந்த இடத்தில் சரியான வீரர் இல்லாமல் கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிசப் பண்ட் போன்றவர்கள் விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மறுபுறம் அதன் பின் கடந்த 4 வருடங்களாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சுமாராவே செயல்பட்ட விஜய் சங்கர் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகி வந்தார்.

- Advertisement -

ஆனால் இப்போட்டியில் தம்மாளும் அதிரடியாக விளையாட முடியும் என்று நிரூபித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் இதே போல தொடர்ந்து செயல்பட்டால் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க:IPL 2023 : நம்ப முடியாத வெற்றியுடன் ரிங்கு சிங் உலக சாதனை – தோனி, ரோஹித், மில்லர் ஆகியோரை மிஞ்சி 4 சரித்திர சாதனை

“உலகக் கோப்பையில் காயமடைந்து வெளியேறியது எனக்கு கடினமாக அமைந்தது. ஒருவேளை இந்த தொடரில் இதேபோல சிறப்பாக செயல்பட்டால் நாட்டுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு எனக்கு தாமாக கிடைக்கும்” என்று கூறினார். அதற்கேற்றார் போல் உலக கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவார்கள் என்று கருதப்படும் சூரியகுமார் யாதவ் சொதப்பும் நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்து வெளியேறியுள்ளார். அதனால் விஜய் சங்கர் அந்த இடத்தில் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement