18 ரன்ஸ்.. கொல்கத்தா அபார சாதனை வெற்றி .. பும்ராவின் தனித்துவ சாதனையை வீணடித்த மும்பை தோல்வி

- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் மே பதினொன்றாம் தேதி கொல்கத்தாவில் 60வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. குறிப்பாக மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டி இரு அணிகளுக்கும் தலா 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அடுத்த ஓவரிலேயே பும்ராவின் அற்புதமான இன்ஸ்விங் பந்தில் சுனில் நரேன் கோல்டன் டக் அவுட்டானார். குறிப்பாக 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவரை அட்டகாசமான பந்தால் அவுட்டாக்கிய பும்ரா இந்த வருடம் மொத்தமாக 20* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரு சீசனில் 20+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

சொதப்பிய மும்பை:
2016, 2020, 2021, 2024* ஆகிய 4 வருடங்களில் இதுவரை பும்ரா 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரை தவிர்த்து மலிங்கா மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 (10) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அசத்திய வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (21) ரன்கள் குவித்தார்.

அதைத் தொடர்ந்து நித்திஷ் ராணா 33 (23), ரசல் 24, ரிங்கு சிங் 20, ரமந்தீப் சிங் 17* ரன்கள் அடித்ததால் கொல்கத்தா 16 ஓவரில் 157/7 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2, பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 158 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலாக விளையாடிய இசான் கிசான் 40 (22) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் திணறலாக விளையாடிய ரோகித் சர்மா 19 (24) ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் 11 (14) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அந்த நிலைமையில் திலக் வர்மா அதிரடியாக விளையாடி 32 (17) ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 0, நேஹால் வதேரா 3 ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்கள்.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்.. புதிய கேப்டன் யார்? வெளியான அறிவிப்பு

அதனால் 16 ஓவரில் 139/8 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக 9வது தோல்வியை சந்தித்தது. மறுபுறம் 12 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த கொல்கத்தா நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. அத்துடன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 52வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற (52, வான்கடே) மும்பையின் சாதனையையும் சமன் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரசல், வருண் சக்கரவர்த்தி ஹர்சித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்

Advertisement