வீடியோ : 150 கி.மீ பந்தால் ஸ்டம்ப்பை தெறிக்க விட்ட உம்ரான் மாலிக் – பெய்ல்ஸ் எங்கே பறந்தது தெரியுமா? ரசிகர்கள் வியப்பு

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்துள்ளது. டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 234/5 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய சுப்மன் கில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 126* (63) ரன்களும் ராகுல் திரிபாதி 44 (22) ரன்களும் குவித்தனர். அதை தொடர்ந்து 235 ரன்களை துரத்திய நியூசிலாந்து ஆரம்பத்திலேயே புதிய பந்தை ஸ்விங் செய்து அனல் பறக்க பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 12.1 ஓவரில் வெறும் 66 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 35 (35) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்

- Advertisement -

பறந்த பெய்ல்ஸ்:
அதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனை வெற்றியுடன் கோப்பையை வென்று சொந்த மண்ணில் தங்களை அவ்வளவு எளிதில் சாய்க்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது. முன்னதாக பிளாட்டான பிட்ச்சை கொண்டிருந்த அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்து பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் இந்திய பவுலர்கள் நல்ல லைன், லென்த், ஸ்விங் ஆகிய அனைத்தையும் கலந்து எதிரணியை தாக்கினர்.

குறிப்பாக இயற்கையாகவே முரட்டுத்தனமான வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக் வழக்கம் போல தொடர்ந்து 145 கி.மீ எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அந்த வேகத்தில் 2.1 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 4.15 என்ற சிறப்பான எக்கனாமியில் 2 முக்கிய விக்கெட்களை எடுத்து மிகச் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலை கொடுத்த மைக்கேல் பிரேஸ்வெல் இப்போட்டியிலும் அதிரடியை காட்டுவதற்காக தயாரானார்.

- Advertisement -

ஆனால் 5வது ஓவரை வீசிய உம்ரான் மாலிக் 3வது பந்தை சரியான லைனை பிடித்து கச்சிதமான லென்த்தில் பிட்ச் செய்து 150 கி.மீ வேகத்தில் வீசினார். அந்த லைன் மற்றும் லென்த்தை மைக்கேல் பிரேஸ்வெல் சரியாக கணித்தாலும் அதிரடியான வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பேட்டை சுழற்றினார். ஆனால் அவர் பேட்டை சுழற்றுவதற்கு முன்பாகவே அதிவேகத்தில் சென்ற பந்து ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்து தெறிக்க விட்டு க்ளீன் போல்ட்டாக்கியது. அதனால் மைக்கல் பிரேஸ்வெல் ஏமாற்றத்துடன் சென்ற நிலையில் தனது அதிரடியான வேகத்தால் சாதித்த உம்ரான் மாலிக் காற்றில் பஞ்ச் கொடுத்து வெற்றியை கொண்டாடினார்.

அதை விட 150 கி.மீ வேகத்தில் தாக்கப்பட்டதால் தெறித்த ஸ்டம்புகளில் இருந்த பெய்ல்ஸ் 30 யார்ட் சர்க்கிள் எனப்படும் உள்வட்டத்தை தாண்டி கிட்டதட்ட பவுண்டரி அருகே பறந்து சென்று விழுந்தது. அதைப் பார்த்து வர்ணையாளர்களும் ரசிகர்களும் வியந்து போனார்கள் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க வேகத்தை மட்டுமே நம்பி பந்து வீசி ரன்களை வாரி வழங்கி 2 போட்டியுடன் கழற்றி விடப்பட்ட உம்ரான் மாலிக் ரன் மெஷின் என்ற கிண்டல்களுக்கு உள்ளானார்.

இதையும் படிங்க: வீடியோ : 150 கி.மீ பந்தால் ஸ்டம்ப்பை தெறிக்க விட்ட உம்ரான் மாலிக் – பெய்ல்ஸ் எங்கே பறந்தது தெரியுமா? ரசிகர்கள் வியப்பு

ஆனால் அதற்காக துவளாமல் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று லைன், லென்த் ஆகியவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் இந்திய அணிக்கு தேர்வான அவர் 2வது வாய்ப்பில் இதுவரை விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் குறைவான ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து மிரட்டலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்துள்ள அவர் தொடர்ச்சியான பயிற்சியும் வாய்ப்பும் ஆதரவும் கொடுத்தால் தம்மால் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement