IND vs NZ : ஒரே செஞ்சுரி தான். ரெய்னா மற்றும் விராட் கோலி என 2 பேரையும் பின்னுக்கு தள்ளிய – சுப்மன் கில்

Gill-Raina-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சுப்மன் கில்லும், தொடர் நாயகனாக ஹார்டிக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Shubman-Gill

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தனர். அதிலும் குறிப்பாக துவக்க வீரரான சுப்மன் கில்லின் ஆட்டத்தில் நேற்று அனல் பறந்தது. 63 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 126 ரன்கள் அடித்தார்.

சமீபகாலமாகவே தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அசத்தலாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியிருந்ததோடு கடைசி போட்டிகளில் சதம் அடித்திருந்தார். இந்நிலையில் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் சதம் அடித்த அவர் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

Shubman Gill

அதன்படி இந்திய அணிக்காக டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் சதாம் விளாசிய ஐந்தாவது வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த சாதனையை ரோகித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போன்று டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவின் சாதனை ஒன்றினையும் கில் முறியடித்துள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்காக இளம் வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சுரேஷ் ரெய்னா (23 வயது 156 நாட்கள்) வைத்திருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் சுப்மன் கில் அடித்த சதத்தின் மூலம் (23 வயது 146 நாட்கள்) அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : அகமதாபாத் மைதானத்தில் சாதனை படைத்த இந்திய அணி – செம மாஸ் சாதனை தான்

அதேபோன்று இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையில் விராட் கோலி 122 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் சுப்மன் கில் அடித்த 126 ரன்கள் மூலம் தற்போது டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி சாதனைகளுக்கு மேல் சாதனை செய்துள்ள சுப்மன் கில் நிச்சயம் இந்திய அணியின் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

Advertisement