IND vs NZ : அகமதாபாத் மைதானத்தில் சாதனை படைத்த இந்திய அணி – செம மாஸ் சாதனை தான்

Shubman-Gill
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது ஏற்கனவே இங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்கிற கணக்கில் முழுவதுமாக இந்திய அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியிடம் தவறவிட்டது.

IND-vs-NZ

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்ததால் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது துவக்க வீரர் சுப்மன் கில்லின் அதிரடியான சதம் காரணமாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் மிடில் ஆர்டரில் அனைவருமே தங்களது பங்கிற்கு கை கொடுக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது.

IND vs NZ Hardik Pandya

பின்னர் 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு சாதனையையும் படைத்துள்ளது. அந்த சாதனை யாதெனில் இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 224 ரன்கள் அடித்ததே இந்த மைதானத்தில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இதையும் படிங்க : IND vs NZ : தயவு செஞ்சு வீட்டுக்கு அனுப்புங்க, 14 போட்டிகளாக சொதப்பும் இளம் வீரர் – ரசிகர்கள் கொதிப்பு

ஆனால் நேற்றைய போட்டியில் 234 ரன்கள் அடித்ததன் மூலம் இந்த அகமதாபாத் மைதானத்தில் அதிக ரன்களை இந்திய அணி பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அதே வேளையில் ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 260 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement