இதெல்லாம்மா ரிவியூ எடுப்பாங்க, இந்தியாவின் பரிதாப முடிவை சிரித்து கலாய்த்த அம்பயர் – கிண்டலடித்த டிகே

DRS Review Umpire
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. ஆனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அந்த புத்துணர்ச்சியுடன் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து ஃபிளாட்டான பிட்ச்சில் சிறப்பாக செயல்பட்டு 480 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணிக்கு உஸ்மான் கவாஜாவுடன் கை கோர்த்து 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் அவுட்டாக அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இந்தியா போராடியது. ஆனாலும் மறுபுறம் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்த உஸ்மான் கவஜாவுடன் ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய முதல் சதமடித்து 114 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

கலாய்த்த அம்பயர்:
அவருடன் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த உஸ்மான் கவாஜா 180 ரன்கள் குவித்து ஒரு வழியாக அவுட்டானார். ஆனாலும் கடைசி நேரத்தில் நேதன் லயன் 34, டோட் முர்பி 41 என கணிசமான ரன்களை குவித்து 8வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த டெயில் எண்டர்களையும் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா 2வது நாள் முடிவில் 36/0 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் 5வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய தொல்லை கொடுத்த கவாஜா – க்ரீன் ஜோடியை பிரிக்கும் முயற்சியுடன் பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 128வது ஓவரின் கடைசிப் பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட் கேட்டார். ஆனால் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச் ஆகி வந்த அந்த பந்து நிச்சயமாக ஸ்டம்ப்களில் படாது என்பதை நன்றாக தெரிந்து தான் உஸ்மான் கவாஜா பேட்டில் அடிக்காமல் வேண்டுமென்றே காலில் வாங்கினார். இருப்பினும் அந்த பந்து திரும்பியதால் நிச்சயமாக அவுட் என்று கருதிய ரவீந்திர ஜடேஜா கேப்டன் ரோஹித் சர்மாவை வற்புறுத்தி ரிவ்யூ எடுக்க வைத்தார்.

- Advertisement -

அந்த சமயத்தில் 2 மணி நேரங்களாக விக்கெட் கிடைக்காமல் திணறியதால் ரோகித் சர்மாவும் வேறு வழியின்றி ஒருவேளை அவுட் இருக்குமோ என்று நம்பி ரிவ்யூ எடுத்தார். ஆனால் அதை 3வது நடுவர் சோதிக்கும் போது பந்து சம்பந்தமில்லாத இடத்தில் பிட்ச் ஆகி ஸ்டம்ப்பின் பக்கத்தில் கூட செல்லாமல் இருந்தது தெரிந்தது. குறிப்பாக ஸ்டம்ப்களுக்கு ஒரு அடி வெளியே பந்து வந்ததால் கொஞ்சமும் யோசிக்காத 3வது நடுவர் ஜெயராமன் மதன்கோபால் அது அவுட் இல்லை என்று அறிவிக்குமாறு களத்தில் இருந்த நடுவரிடம் சொன்னார்.

அதை கேட்ட களத்தில் இருந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோக் தனது முடிவு சரியாக இருந்ததுடன் “ஸ்டம்ப்க்கும் பந்துக்கும் ஒரு அடி இடைவெளி இருந்த இதை கூடவா ரிவியூ எடுப்பீர்கள். நீங்கல்லாம் என்ன சர்வதேச வீரர்களோ” என்ற வகையில் சிரித்தவாறு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை கலாய்க்கும் வகையில் புன்னகை கலந்து முகத்துடன் அவுட் இல்லை என்று மீண்டும் அறிவித்தார். அதை பார்த்த தினேஷ் கார்த்திக் “3வது நடுவர் தூங்காமல் இருக்கிறாரா என்பதை சோதிப்பதற்காக தான் இந்தியா இந்த ரிவ்யூ எடுத்தது” என்று தனது பங்கிற்கு வஎர்ணையாளராக ரோகித் சர்மாவை கலாய்த்தார்.

இதையும் படிங்க:IND vs AUS : பீல்டிங்கில் ராகுல் டிராவிடுக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக விராட் கோலி படைத்த – மாபெரும் சாதனை

முன்னதாக இத்தொடரில் ஒவ்வொரு பந்தும் அவுட்டாக இருக்கும் என்று ரவீந்திர ஜடேஜா ரிவ்யூ எடுக்க சொல்லி வற்புறுத்துவதாக இப்போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் அவரது பேச்சை கேட்டு எடுத்த ரிவியூ இறுதியில் ரோஹித் சர்மா தலை குனியும் அளவுக்கு பரிதாப நிலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement