IND vs AUS : பீல்டிங்கில் ராகுல் டிராவிடுக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக விராட் கோலி படைத்த – மாபெரும் சாதனை

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியானது மார்ச் ஒன்பதாம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

IND

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை என்றாலும் தற்போது அவர் பீல்டிங்கில் செய்துள்ள ஒரு மாபெரும் சாதனை அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் அடிக்க முற்பட்டபோது அது விராட் கோலியின் கையில் தஞ்சம் அடைந்தது. இந்த கேட்சினை சரியாக பிடித்த விராத் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Kohli 1

நாதன் லையன் கேட்ச்சை பிடித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 300-ஆவது கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்திய அணி சார்பாக ராகுல் டிராவிட் 334 கேட்சிகளை பிடித்து அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரராக இருக்கும் வேளையில் தற்போது அதிக கேட்சிகளை பிடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

- Advertisement -

உலக அளவில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே 440 கேட்ச்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் 364 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். தற்போது 300 கேட்ச்களை பிடித்துள்ள கோலி 7 ஆவது இடத்தினை பிடித்துள்ளார். இருப்பினும் நிச்சயம் பாண்டிங்கின் இரண்டாவது இடத்தையும் அவர் கடந்து செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : வீடியோ : சிக்ஸரால் தொலைந்த பந்து, உள்ளே புகுந்து நீண்ட நேரம் தேடி கண்டுபிடித்த ரசிகர் – பாராட்டிய சாஸ்திரி, சிரித்த கில்

நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 480 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 444 ரன்கள் பின்னிலையுடன் நாளை மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement