வீடியோ : கேட்ச்சுக்கு சிக்ஸர் வழங்கிய அம்பயர் – பிக்பேஷ் தொடரில் மற்றுமொரு சம்பவத்தால் ரசிகர்கள் அதிருப்தி

BBL Roof
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக்பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 14ஆம் தேதியன்று நடைபெற்ற 41வது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஸ்டார்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ரெனிகேட்ஸ் 20 ஓவர்களில் 162/7 ரன்கள் சேர்த்தது. மார்ட்டின் கப்டில் 11, கேப்டன் பின்ச் 13 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக சாம் ஹார்பர் 51 (36) ரன்களும் ஜேக் வெல்ஸ் 44 (24) ரன்களும் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய ஸ்டார்ஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் ஜோ கிளார்க் 59 (37) ரன்களும் டாம் ரோஜர்ஸ் 27 (23) ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் கார்ட்ரைட் 12, வெப்ஸ்டர் 29, லார்கின் 21* (19) என முக்கிய முக்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும் பெரிய ரன்களை எடுக்க தவறினார். அதனால் 20 ஓவர்களில் 1567 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

வேடிக்கையான சிக்ஸர்:
அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டி ஆஸ்திரேலியாவில் இருக்கும் புகழ் பெற்ற டோக்லேண்ட்ஸ் மார்வெல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதன் சிறப்பு பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது மழையால் பல கிரிக்கெட் போட்டிகள் தடை பெறுவதை தடுப்பதற்காக ஆஸ்திரேலியாவில் கட்டமைக்கப்பட்ட மூடப்பட்ட கூரையை கொண்ட மைதானங்களில் இது முதன்மையானதாகும். அப்படிப்பட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்டார்ஸ் அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜோ கிளார்க் வில் சதர்லேண்ட் வீசிய 3வது ஓவரின் ஒரு பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சித்தார்.

ஆனால் எட்ஜ் ஆகி நேராக வானத்தை நோக்கி பறந்த அந்த பந்து மிகவும் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கூரையில் மோதியதால் மீண்டும் 30 யார்ட் வட்டத்திற்குள் விழுந்தது. அப்படி பந்து தடைபட்டு வந்ததால் அதனுடைய திசைக்கேற்று சென்று கேட்ச் பிடிக்க முடியாமல் எதிரணி பீல்டர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். அதே இன்னிங்ஸில் மீண்டும் டாம் ரோஜர்ஸ் வீசிய 16வது ஓவரில் வெப்ஸ்டர் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். அந்த பந்தும் எட்ஜ் வாங்கி நேராக மேலே சென்று கூரையில் பட்டு மீண்டும் பிட்ச்க்கு அருகே விழுந்தது.

- Advertisement -

அதனால் 2 கேட்ச்களையுமே எதிரணி பீல்டர்கள் பிடிக்க முடியாத நிலையில் அம்பயரோ 2 தருணத்திலும் சிக்ஸர் வழங்கினார். ஆரம்ப காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலேயே இது போன்ற தருணங்களை டெட் பால் என்று நடுவர்கள் அறிவித்ததை போலவே பிக்பேஷ் தொடரிலும் இது போன்ற தருணங்களை டெட் பால் என்று நடுவர்கள் அறிவித்து வந்தார்கள். ஆனால் கடந்த சீசனில் ஒரு போட்டியில் ஆரோன் பின்ச் அடிக்கடி அதிரடி ஷாட்களை அடித்த போது கூரையால் சிக்ஸர்கள் தவறியது.

அதனால் இந்த சீசனில் மைதானத்தின் கூரை மீது பட்டால் அதை சிக்ஸராக அறிவிக்க வேண்டும் என்ற புதிய மாற்றத்தை பிபிஎல் நிர்வாகம் செய்துள்ளது. அதனாலேயே இம்முறை அது போன்ற தருணம் நிகழ்ந்த போது நடுவர்கள் யோசிக்காமல் சிக்சர்கள் வழங்கினார்கள். ஆனால் இம்முறை அந்த 2 தருணங்களிலுமே கூரை இல்லாமல் இருந்திருந்தால் அது கேட்ச்சாக மாறியிருக்கும் என்பதை நினைத்து ரசிகர்கள் அதிருப்தியடைகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS: நாங்க சரியா தான் செலக்ட் பண்ணிருக்கோம், இஷான் கிசான் – சூர்யாகுமார் தேர்வு செய்யப்பட்டது ஏன்? பிசிசிஐ விளக்கம்

முன்னதாக ஏற்கனவே இந்த தொடரில் பவுண்டரிக்குள் சென்ற பந்தை மைக்கேல் நீசர் சாதூரியமாக பிடித்த போது சிக்ஸர் வழங்காமல் அவுட் வழங்கியதும், ஆடம் ஜாம்பா மன்கட் முறையில் ரன் அவுட் செய்த போது 90 டிகிரி கற்பனை கோட்டை தாண்டி விட்டார் என்ற புதிய விதிமுறையை சொல்லி அவுட் வழங்காதது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் இந்த நிகழ்வும் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement