IND vs AUS: நாங்க சரியா தான் செலக்ட் பண்ணிருக்கோம், இஷான் கிசான் – சூர்யாகுமார் தேர்வு செய்யப்பட்டது ஏன்? பிசிசிஐ விளக்கம்

- Advertisement -

வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. எனவே நிச்சயம் வென்றாக வேண்டிய அத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சமீப காலங்களில் கிரிக்கெட் ரஞ்சி கோப்பையில் அற்புதமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Sarfaraz-khan-2

- Advertisement -

குறிப்பாக 2019க்குப்பின் 9 சதங்கள் 5 அரை சதங்கள் 3 இரட்டை சதங்கள் 1 முச்சதம் உட்பட 2289 ரன்களை 134.64 என்ற வியக்க வைக்கும் சராசரியில் குவித்து வரும் அவர் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையிலும் 431 ரன்கள் விளாசி உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் அவரைப் புறக்கணித்துள்ள தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இசான் கிசானையும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மனாக ஜொலிக்கும் சூரியகுமாரையும் இந்த டெஸ்ட் அணியில் தேர்வு செய்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

ஏனெனில் என்னதான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டாலும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முறையே 38.76, 44.75 என்பதே இசான் கிசான் மற்றும் சூரியகுமார் ஆகியோருடைய பேட்டிங் சராசரியாகும். ஆனால் சர்பராஸ் கான் 80.47 என்ற அற்புதமான பேட்டிங் சராசரியுடன் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கி வருகிறார். எனவே அப்படிப்பட்ட அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தேர்வுக்குழு தவறு செய்துள்ளதாக நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Ishan-Kishan-1

சரியான தேர்வு:
இந்நிலையில் சமீபத்தில் காயமடைந்ததால் இந்த டெஸ்ட் தொடரில் விலகிய நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடுவார் என்பதை அனைவருமே அறிவோம். எனவே அவர் இல்லாத சமயத்தில் அவரைப் போலவே முக்கிய நேரத்தில் அதிரடியாக விளையாட மிடில் ஆர்டரில் ஒருவர் தேவை என்ற காரணத்தாலேயே இஷான் கிசான் மற்றும் சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

- Advertisement -

இது பற்றி பிசிசி தலைமை அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் இடத்தில் அவரைப் போன்ற ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ரிஷப் பண்ட் போல 5வது இடத்தில் போட்டியை தலைகீழாக மாற்றக்கூடிய திறமை கொண்ட ஒருவர் இத்தொடரில் இந்திய அணிக்கு தேவைப்படுகிறார். அதன் காரணமாகத்தான் இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரியகுமார் யாதவும் அதே நோக்கத்தில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த தொடரில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”

Suryakumar Yadav Ranji

“அப்படிப்பட்ட கடினமான ஆடுகளங்களில் ரிசப் பண்ட் போல அதிரடியாக விளையாடி போட்டியை மாற்றும் தன்மை கொண்ட ஒருவர் நமக்கு தேவைப்படுகிறது. மறுபுறம் கேஎஸ் பரத் டாப் 6 இடங்களில் விளையாடக் கூடியவராக இல்லை. அதே சமயம் அதற்கு கீழான இடத்தில் அவர் விளையாடும் போது நாம் ஒரு பந்து வீச்சாளரை தியாகம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. ஆனால் இசான் கிசான் விளையாடினால் அவர் டாப் 6 இடங்களுக்குள் பேட்டிங் செய்வார். இருப்பினும் இப்போதும் ஒரு பிரச்சனை என்னவெனில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இசான் கிசான் விக்கெட் கீப்பிங் செய்வதில்லை. கடைசியாக ஜார்க்கண்ட் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய போது அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: பாவம் அவர ஏமாற்றாதிங்க, அடிப்படை செலக்சன் கூட தெரியாதா? தேர்வுக்குழுவை விளாசிய இர்பான் பதான், ஹர்ஷா போக்லே

மேலும் ஏற்கனவே நிறைய வலது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்திருக்கும் இந்திய பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட் மட்டுமே இடது கை பேட்ஸ்மேனாகவும் அதிரடியாக விளையாடுபவராகவும் உள்ளார். ஆனால் அவர் இல்லாத நிலையில் அவருக்கு பதில் வலது கை பேட்ஸ்மேனான பரத் விளையாடுவது மீண்டும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலேயே இசான் கிசான் போன்ற அதிரடியான இடது கை பேட்ஸ்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

Advertisement