வீடியோ : 102 மீட்டர் சிக்சருடன் ஸ்டம்ப்பை உடைத்ததற்கு திலக் வர்மா பழிக்கு பழி – சொதப்பிய அர்ஷ்தீப் மோசமான உலக சாதனை

Tilka Varma Arshdeep Singh
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதி மொகாலியில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 214/3 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 82* (42) ரன்களும் ஜிதேஷ் சர்மா 49* (27) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட்களை சாய்த்தார். அதைத் துரத்திய மும்பைக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித் சர்மா டக் அட்டானாலும் இஷான் கிசான் 75, கேமரூன் கிரீன் 23, சூரியகுமார் யாதவ் 66 என இதர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ரன்களை குவித்தனர்.

குறிப்பாக 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த சூரியகுமார் யாதவ் நாதன் எலிஸ் வீசிய 16வது ஓவரில் ஆட்டமிழந்ததும் மறுபுறம் அதிரடி காட்டிய இசான் கிசானை 17வது ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங் முதல் பந்திலேயே அவுட்டாக்கினார். அதனால் கடந்த போட்டியை போலவே அர்ஷிதீப் சிங் மீண்டும் பஞ்சாப்பை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக கடந்த வாரம் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இதே போல 215 ரன்களை துரத்திய மும்பை கேமரூன் கிரீன் 67, சூரியகுமார் யாதவ் 57, ரோகித் சர்மா 44 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் வெற்றியை நெருங்கியது.

- Advertisement -

மோசமான உலக சாதனை:
ஆனால் கடைசி ஓவரில் வெறும் 16 ரன்கள் தேவைப்பட்ட போது திலக் வர்மாவின் மிடில் ஸ்டம்ப்பை உடைத்து 3 (4) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய அவர் அடுத்த பந்திலேயே நேஹல் வதேராவின் மிடில் ஸ்டம்ப்பையும் இரண்டாக உடைத்து டக் அவுட்டாக்கி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அந்த நிலையில் இம்முறை இஷான் கிசான் அவுட்டானதும் களமிறங்கிய திலக் வர்மா முதலிரண்டு பந்துகளில் ரன்களை எடுக்கவில்லை என்றாலும் 6, 4, 6 என கடைசி 3 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு பதிலடி கொடுத்தார்.

அதே வேகத்தில் அதிரடியாக செயல்பட்ட அவர் 19வது ஓவரின் கடைசி பந்தில் 102 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு அர்ஷிதீப் சிங்கிற்கு தக்க பதிலடி கொடுத்து பழிக்கு பழி தீர்த்து 26* (10) ரன்கள் எடுத்து மும்பையை வெற்றி பெற வைத்தார். அவருடன் டிம் டேவிட் 19* (10) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரிலேயே வென்ற மும்பை அடுத்தடுத்த போட்டிகளில் 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக சாதனை படைத்தது.

- Advertisement -

ஆனால் கடந்த போட்டியில் மிடில் ஸ்டம்பை உடைத்து ஹீரோவாக செயல்பட்ட அர்ஷிதீப் சிங் இந்த போட்டியில் 3.5 ஓவரில் 66 ரன்களை 17.22 என்ற படுமோசமான எக்கனாமியில் வாரி வழங்கி வெற்றி பறி போவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். முன்னதாக பஞ்சாப் அணியில் கடந்த சில வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்த அவர் சமீபத்திய இலங்கை தொடரில் நோபால்களை போட்டு படைத்த மோசமான உலக சாதனையை யாரும் மறக்க முடியாது.

அந்த நிலைமையில் இப்போட்டியில் முழுமையாக 4 ஓவர்களை வீசி முடிக்காமலேயே 66 ரன்கள் கொடுத்த அவர் உலக டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்களை முழுமையாக வீசுவதற்குள் அதிக ரன்களை வாரி வழங்கிய பவுலர் என்ற மோசமான உலக சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அர்ஷிதீப் சிங் : 66* (3.5 ஓவர்கள்) – மும்பைக்கு எதிராக, 2023
2. பென் வீலர் : 64 (3.1 ஓவர்கள்) ஓவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2018

இதையும் படிங்க: IPL 2023 : சி.எஸ்.கே அணிக்கு இப்படி ஒரு வீரர் தேவையா? தோனி எப்படி இந்த தவறை ஒப்புக்கொண்டார் – ரசிகர்கள் கோபம்

அத்துடன் கடந்த ஆசிய கோப்பையில் அடுத்தடுத்த போட்டிகளில் 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கி இந்தியாவின் வெற்றியை தாரை வார்த்த அவர் இந்த போட்டியிலும் அதே 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். அதனால் 19வது ஓவரில் இவருக்கு கண்டம் என்று அப்போது கலாய்த்தது போலவே ரசிகர்கள் மீண்டும் அர்ஷ்தீப்பை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement